
தமிழ்நாட்டுக் கோயில்களை எல்லாம் சித்தர்கள் தான்
கட்டி முடித்தார்கள் என்பது மரபு. பழனியைப்
போகரும், ஜ்வாலாமுகியை கோரக்க நாதரும்
சிதம்பரத்தைத் திருமூலரும் கட்டினதாகச் சொல்
கிறார்கள்.
பாஷாணப் பழனியாண்டியின் மூக்கில்
நுனி விண்டுவிட்டதாகவும். அது இருமல் மருந்தாக
உபயோகப்படுவதாகவும் சொல்கிறார்கள். ஜ்வாலா
முகியில் எங்கேயோ உள்ளிருந்து எரியும் தீ எத்தனையோ
காலமாக அணையாமல் எரிந்து கொண்டிருப்பதாகவும்
அத் தீ புனிதமானது என்றும் கருதுகிறார்கள்.
அதனால் என்ன பயன் அதன் புனிதத்தைத் தவிர
என்று எனக்குத் தெரியவில்லை.
ஆனால்
சிதம்பரத்தில் இருந்து சுற்றிவரச் சுற்றிவர
மனசிற்குள் ஒரு அமைதி பிறப்பதை நான்
உணர்ந்திருக்கிறேன். திருமூலர் மூவாயிரம்
ஆண்டு வாழ்ந்து ஆண்டுக்கொரு நாலு வரிக்
கவிதையாகப் பாடி வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும்
வழிகாட்ட முயன்றதை என்னால் நம்ப முடிகிறது.
நானும் வார்த்தைகளில் அர்த்தத்தை வடித்து
வாழ்க்கைக்கு ஒரு வழி காண முயலுபவன்தான்.
திருமந்திரம் என்கிற நூல் யாருக்கு இன்று வழி
காட்டுகிறதோ -இல்லையோ எனக்கு என் மனக்
குழப்பத்தில் வழி காட்டுகிறது. சிதம்பரம் கோயில்
தினமும் மாலையில் என் கால்களை வேறு எங்கும்
போகவிடாமல் இழுப்பதுபோல், என் வார்த்தைகள்
என்னவோ அர்த்தம் பெற்றாலும் வார்த்தைகளாகவே
இருந்துவிடுகின்றன. இது ஏன் என்று தெரியவில்லை.
திருமந்திரத்தில் திருமூலர் ஒரு “சைபர்” புதிரை விடுவிக்கும்
மந்திரம் சூனியப் பத்தில் வைத்திருக்கிறார் என்று
யோகியார் சொல்லக் கேட்டிருக்கிறேன். என் உள்ளக்
கோயிலில் குடியிருக்கும் சித்தபுருஷரை நான் ஒரு
புதிர் விடுவிக்கும் மந்திரம் செய்கிறேன்.
தருவாரா – தெரியவில்லை. தெரியவில்லை.
(ஞானரதம் செப்டம்பர் 1986)
