ஆர்க்கன்சா மாநிலம்/நியாண்டர் செல்வன்

ஒரு 75 வயதான பெண்ணும் அவரது உடன்பிறந்தார் மகனும் ஒரு வீட்டில் இருக்கிறார்கள். 16 வயதான ஒரு திருடன் வீட்டுக்குள் நுழைகிறான். இருவரையும் சுட்டுகொன்றுவிட்டு கொள்ளையடித்துவிட்டு செல்கிறான்

போலிஸ் அவனை பிடிக்கிறது. 28 ஆன்டுகள் ஜெயில்தண்டனை வழங்கபடுகிறது

சுட்டுகொல்லபட்ட பெண்ணின் மகள் பவுத்த சமயத்தை சார்ந்தவர். 16 வயதான அந்த கொலைகாரன் மிக கொடுமையான பின்புலத்தில் இருந்து வந்திருக்கிறான். ஏழ்மை, கஸ்டம், துயரம் எல்லாம் அவனை கொலைகாரனககியுள்ளது என்பதை கண்டறிகிறார்

அவனை மன்னித்துவிடுகிறார். சிறையில் இருந்து அவன் விரைவில் நன்னடத்தை காரணமாக விடுதலையும் ஆகிவிட, அவனுக்கு யாரும் வேலை கொடுக்க தயராக இல்லை. இவரே தன் வீட்டில் வேலையும் போட்டு கொடுக்கிறார்

நன்றி சொல்லிவிட்டு அவன் செய்த அடுத்த வேலை இவரை போட்டுதள்ளிவிட்டு மீண்டும் அதே வீட்டில் கொள்ளையடித்துவிட்டு போனதுதான்.

குற்றவாளியை கட்டிபிடிச்சு அழுத ஒரே கான்ஸ்டபிளான என்கவுன்டர் ஏகாம்பரத்தையே சென்டிமென்டில் மிஞ்சிவிட்டார் இந்த அம்மணி.

வளர்ப்பு அந்த குற்றவாளிக்கு மட்டும் சரியில்லையா இல்லை இந்த அம்மணிக்கும் சரியில்லையா என தெரியலை.

பிள்ளைகளுக்கு பிழைக்க கத்துகொடுங்க. இல்லன்னா போய் சேந்துடுவாங்க.