
மேற்கு ஆப்பிரிக்காவின் பெனின் நாட்டை பிடிக்க சென்ற பிரெஞ்சு படையினருடன் டஹோமி (Dahomey) அரசின் ராணுவம் மோதியது. அந்த ராணுவத்தை கண்ட பிரெஞ்சுகாரர்கள் அதிர்ச்சியில் மூழ்கினார்கள். ராணுவத்தில் பாதிக்கு பாதி பெண்கள்.
கிரேக்க புராணங்களில் வரும் அமேசான் பெண் வீரர்கள் பெயரால் அவர்களை “டஹோமி அமேசான்கள்” என அழைத்தனர் பிரெஞ்சுகாரர்கள்.
டஹோமி ராணுவத்தில் ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண் வீரர் துணையாக நியமிக்கபடுவார். அந்த பெண்கள் சமூகத்தின் ஏழைகள், அனாதைகளில் இருந்து வருவார்கள். பிடிபட்ட எதிர்ரி நாட்டு கிராமங்களில் இருந்து பிடிபடவர்களாக இருக்கலாம். தானாக வந்து சேர்ந்தவர்களாக இருக்கலாம். மன்னரின் ஆயிரக்கணக்கான மனைவியரில் இருந்து வருபவர்களாகவும் இருக்கலாம். ஆனால் ராணுவத்தில் சேர்ந்தவுடன் “மன்னரின் மனைவியராக” அதிகாரபூர்வமாக அறிவிக்கபடுவார்கள். அதன்பின் யாரும் அவர்களை கல்யானம் செய்யவோ, பாலியல் தொடர்பு கொள்ளவோ முடியாது. போதாகுறைக்கு பெண்ணுறுப்பும் சிதைக்கப்படும்.
டஹோமி நாடு நடத்திய போர்களில் மிக உக்கிரமாக செயல்பட்டவர்கள் இந்த அமேசான்கள். பிரான்சுடன் போரில் தோற்று பிரெஞ்சு காலனியானவுடன் 1892ல் பெண்கள் ராணுவம் கலைக்கபட்டது. காடுகளில் மறைந்திருந்து கொரில்லா போர் புரிந்த மன்னரின் தம்பியுடன் சேர்ந்து இந்த அமேசான்பெண்களும் போர்புரிந்தார்கள். பிரெஞ்சு ராணுவம் தேட, மன்னரின் தம்பியின் மனைவியராக நடித்து அவரை நாட்டை விட்டு தப்பவைத்தார்கள்.
அதன்பின் போர் ஓய்ந்து பலரும் நகரவாழ்க்கைக்கு திரும்பி, விவசாய வேலை, கூலிவேலை செய்தார்கள். 1978ம் ஆன்டு கடைசி அமெசான் பெண் மரணம் அடைந்தார். 1892ல் நடந்த போரில் பிரெஞ்சுகாரர்களுடன் போரிட்ட வரலாற்றை பதிவு செய்துவிட்டு மரணம் அடைந்தார்
இவர்களின் வரலாறு புனைகதையாக வுமன் கிங் எனும் திரைப்படமாக கடந்த ஆண்டு வெளியானது
