நான் ஆடுகள் வைத்திருக்கும் ஒருவன் /போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா ஆல்பெர்டோ கைரோ

தமிழில் : எம்.டி முத்துக்குமாரசாமி


போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா ஆல்பெர்டோ கைரோ என்று புனைபெயரில் எழுதிய கவிதை. பெசோவாவின் “இந்த பிரபஞ்சத்தைவிடச் சற்றே பெரியது” தொகுப்பிலிருந்து. ஆங்கிலத்தில்: ரிச்சர்ட் செனித். தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
———-
நான் ஆடுகள் வைத்திருக்கும் ஒருவன்
ஆடுகள் என் எண்ணங்கள்
ஓவ்வொரு எண்ணமும் ஒரு தூண்டுணர்ச்சி
நான் என் கண்களாலும் காதுகளாலும் சிந்திக்கிறேன்
என் கைகளாலும் என் பாதங்களாலும்
என் மூக்காலும் வாயாலும்

ஒரு மலரை சிந்திப்பது என்பது அதைப் பார்த்து முகர்வது
ஒரு பழத்தை சாப்பிடுவது என்பது அதன் அர்த்தத்தை அறிவது.

அதனால்தான் ஒரு வெப்பமான நாளில்
அதை நான் அனுபவிக்கும்போதே சோகமாய் இருக்கிறேன்
நான் புல்வெளியில் படுத்துக்கிடக்கிறேன்
நான் எனது கதகதப்பான கண்களை மூடுகிறேன்
எனது மொத்த உடலும் யதார்த்தத்தில் படுத்துக்கிடப்பதாக உணர்கிறேன்
உண்மை தெரிந்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்
—-