
நகைப்புக்குரிய முகமாக மாறிவிட்டதை
வேறொருவரின் முறுவலாக பிரதிபலிக்கிறது
சமீபத்தில் செய்து கொண்ட
ஒருபக்க நவீன முடிதிருத்தம்
பளிச்சென்ற வண்ண அச்சு ஆடைகள்
மணிக்கட்டைக் காட்டிலும் பெருத்த கைக்கடிகாரம்
சுயவியப்பைக் காட்டிலும்
பெருமிதப் புனைவின் ஒப்பனை
சிலர் பார்வை வித்தியாசம்
சில அங்குலங்கள் என்னை உயரமக்கியுள்ளது
பழைய நான் இப்போது தலைமறைவாகிவிட்டேன்
முன்னர் அணிந்த மங்கலான ஆடைகள்
வழக்கமான வகிடு
மரபுவட்டமான கைக்கடிகாரம்
இவையொரு நாட்டமான போதும்
யாரும் தேடாத ஓரிடமாய்
அதீதத்தின் விளிம்பில் புறம்.
All reactions:
33Kandasamy R, கே. என். சிவராமன் and 31 others
