நிரந்தர கீதம்/ஷண்முக சுப்பையா

இறந்தவர்க்காக
இறந்தேன்
இருப்பவருக்காக
இறந்து கொண்டிருக்கின்றேன்.
இனிப் பிறப்பவர்க்காக
இறப்பேன்.
இதுவே எனது
யந்திர வாழ்க்கையின்
நிரந்தர கீதம்.