ஷாக்../அழகியசிங்கர்

(ஓவியத்தை வரைந்தவர் உமா பாலு)

எங்கள் தெரு அகலமான தெரு. அந்தக் காலத்தில் கூத்துப் பட்டறை நாடகமெல்லாம் நடக்கும். இந்த முறை பிகு நடனம் ஆட அசாமிலிருந்து படை சூழ வந்திருந்தார்கள். ஒரு ஞாயிற்றுக் கிழமை தெரு களை கட்டியது.

பிகு நடனம் ஆட விநோதமான உடை தரித்துக் கொண்டு இரண்டு நடுத்தர வயது பெண்மணிகள் வந்திருந்தார்கள். அவர்கள் சளைக்காமல் ஆடிக் கொண்டிருதார்கள். வாத்தியங்களின் இரைச்சலுடன் தெருவே களைக் கட்டியது. இதைப் படம் பிடித்து வரைய ஓவியக் கலைஞர் உமா அவர் கணவருடன் வந்திருந்தார்.

நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த நான், தாட்டியான நடனமாடிய ஒரு பெண்ணைப் பார்த்து, உணர்ச்சி வசப்பட்டு ஓடிப் போய், “சுசீலா …சுசீலா..” என்று கத்தியபடியே அவர் கையைப் பிடித்து இழுத்தேன். உடனே நடனம் நின்றது. எல்லாம் நின்றது. ஒன்றும் புரியாமல் எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். எனக்கும்தான்.

சுசீலா இங்கே எங்கே வந்தாள் ?