
(1)
பிச்சைக்காரர் ஏன் பிச்சை
எடுக்கிறார்….?
இங்கு பிழைக்க பிறிதொரு வழியில்லை….
அவர் வாழும் உலகமும் இனிதில்லை…
இந்தக் கேள்வியில் பொருளில்லை.
(2)
பிச்சைக்காரர் ஏன் பிச்சை
எடுக்கிறார்….?
நம்மை அறத்தின்பால் இழுத்துச் செல்ல…
மண்ணில் வேற்றுமையை
எடுத்துச் சொல்ல….
உள்ளத்தைக் கழுவிக் கொள்ள.
(3)
பிச்சைக்காரர் ஏன் பிச்சை
எடுக்கிறார்…?
விதியின் பிழையால் வீதிக்கு
வந்தார்…
வினையாற்றும் மெய்யை பொய்மைக்குத் தந்தார்…
யாரையும் வீழ்த்தும் ஊழ்.
(4)
பிச்சைக்காரர் ஏன் பிச்சை
எடுக்கிறார்….?
ஆலயம் உள்ளே ஆண்டவன்
இருக்கிறான்….
ஆள்பவன் எல்லாம் தன்னை
வளர்க்கிறான்…
இல்லாதவன் இரந்து பிழைக்கிறான்.
(5)
பிச்சைக்காரர் ஏன் பிச்சை
எடுக்கிறார்….?
பிச்சை புகுந்தா இறையாண்மையை வளர்க்கிறார்…
இச்சை தீரவா தெருவில்அலைகிறார்….
ஈனவயிற்றுக்கு இரந்து பிழைக்கிறார்.
(6)
பிச்சைக்காரர் ஏன் பிச்சை
எடுக்கிறார்….?
அறம் பெருகி ஆறாய் ஓட….
அவரவர் நெஞ்சம் பெருமையில் மூட…
இரக்கிறார் வறுமையில் வாட.
♦
.
