சிரிப்பு / பிரதீபன்

நாடு முழுவதும் இன்று கடையடைப்பு;
தெருவில் ஒரு சுடுகுஞ்சு இல்லை;
பிறந்தவூர் சென்ற
மனைவி திரும்பிவர
இரண்டு நாளாகும்;
பாவம், இவன் சமையல்
அறிந்தானில்லை;
நேற்று வாங்கி வைத்த
ரொட்டியை உண்கிறான்;
மூன்று வேளையும்
அதையே உண்கையில்
முகத்தில் அடித்தாற்
போலிருக்கிறது;
பண்டிகைக் காலங்களில்
பக்கத்து வீடுகளிலிருந்து வரும்
பலகாரங்களை எண்ணிச்
சிரிக்கிறான் இவன்.