கங்கா ஆரத்தி/காலாவதி பாஸ்கரன்

ஆரத்தி எடுக்கிறேன் கங்கைக்கு !
இலைகளால் செய்யப்பட்ட
சிறு தட்டில் நான்கு பூக்கள்
ஒரு தீபத்துடன் நதிக்கு
காட்டி அதை ஆற்றில்
மிதக்க விட,
அழகுடன்,
அமைதியாக அசைந்து
சென்று அனைவரும்
காண ஒளிர்கிறது தீபம் !
கங்கைத் தாய்
தனக்குத் தானே
எடுத்துக் கொள்ளும்
ஆரத்தி !