முற்றுப் புள்ளி/ஞாயிறு ராமஸ்வாமி


முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் முன்னமே ஒரு
முடிவுரை நாம் எழுத வேண்டும்
விரைவிலே சிறு
இடைவெளியும் இருக்க வேண்டும் நடுவிலே இனி
இருப்பதிலே இருக்க வேண்டும் வாழ்விலே.

( முற்றுப் புள்ளி)

அடுக்கடுக்காய் வளர்த்த ஆசை
போதுமே நம்மை
சுற்றி வந்த செயற்கை ஒளி
கூசுமே முன்
விழுந்த நிழல் சாயும் கணம்
மாறவே உள்
எழுந்து நிலை நின்று நம்மை
மாற்றவே.

முற்றுப் புள்ளி)

சத்தம் போடும் சிந்தை மௌனம்
ஆகவே சும்மா
வித்தை காட்டும் சலனம் கண்கள் மூடவே பனி
மெத்தை இட்ட கனவு கூட்டம்
ஓடவே மேல்
நத்தைக் கூடு விலகி உண்மை
பேசவே.

( முற்றுப் புள்ளி)

இறுதிப் பக்கம் திரும்பும் தருணம் தெரியவே கல்
உருகும் நிலை உணரும் பொழுது அறியவே விழும்
விருந்தும் மருந்தும் கலந்த நொடிகள் புரியவே இனி
தொடரும் முடிவின் முகமும் நமக்குத் தெரியவே!

(முற்றுப் புள்ளி)

One Comment on “முற்றுப் புள்ளி/ஞாயிறு ராமஸ்வாமி”

Comments are closed.