
(1)
விமானத்தில் பெண்ணைத் தேள் கொட்டியது…
அவனை மீண்டும் வானில் கண்டபோது…
உள்ளம் மயங்கியது..மீள ஏங்கியது…
வாழ ஆசை கொண்டு.
♦
(2)
விமானத்தில் பெண்ணைத்
தேள் கொட்டியது….
கைப்பையை திறந்து பார்த்த போது…
அவள் அலறும் ஓசையில் வானம்…
இருண்டது போதும் போதுமென்று.
♦
(3)
விமானத்தில் பெண்ணைத்
தேள் கொட்டியது…
தலை நரைத்தவர்கள் ஓடினார்கள் உதவிக்கு.
கணவன் மட்டும் காதில் கருவியுடன்….
அவனுக்கு ” அதைத்” தெரியும்.
♦அனங்கன்.
