விமானத்தில் பெண்ணை தேள் கொட்டியது/இலத்தூர் கி.சங்கர நாராயணன்

கவிதை ஒன்று

விமானத்தில் பெண்ணை
தேள் கொட்டியது
கத்திய கதறலில்
கதவு திறந்தது
கடிவாங்கிய பணிப்பெண்ணே
கதவை மூடினாள்
பாராட்டு வானைப் பிளந்தது.

கவிதை இரண்டு

-விமானத்தில் பெண்ணை தேள் கொட்டியது
மருத்துவர் பயணி
சிகிச்சை தந்தார்
வருத்தம் தெரிவித்தார்
விமானி வணங்கி
இறந்த தேளும் பயமுறுத்தியது.

கவிதை மூன்று


விமானத்தில் பெண்ணை தேள் கொட்டியது
கையால் பிடித்து தூக்கி எறிந்தாள்
கடிவடு முன்னும்
பின்னும் கட்டினாள்
விஷம் செயல் இழந்தது.

One Comment on “விமானத்தில் பெண்ணை தேள் கொட்டியது/இலத்தூர் கி.சங்கர நாராயணன்”

Comments are closed.