அஞ்சலட்டைக் கதை

கதை 42

அழகியசிங்கர்


பெண்கள்


ராமநாதனுக்குப் பெண்களைக் கண்டாலே பேச வெட்கமாக இருக்கும்.  இப்போது அவனுக்கு 24 வயது.  ஏன் இப்படி வெட்கப்படுகிறான் என்று அவள் அம்மா யோசித்துக் கொண்டிருக்கிறாள்.  “நானும் பெண்தானே..என்னிடம் பேச வெட்கப்படுகிறாயா?” என்று அவன் அம்மா ஒருநாள் அவனைக் கேட்டாள். 


“நீ என் அம்மா,” என்றான் ராமநாதன்.  அவன் கல்லூரி படிக்கும்போது ரொம்ப ஜாக்கிரதையாகப் பெண்களைப் பார்த்து ஒதுங்கிக் கொள்வான்.  யாராவது ஒரு பெண் துணிச்சலாக அவனைப் பார்த்துப் பேச ஆரம்பித்தபோது, அவன் தலை குனிந்து கொண்டே பேச ஆரம்பிப்பான்.  உடனே அங்கிருந்து நகர்ந்து விடுவான்.


அந்தப் பெண்ணோ மற்றவர்களிடம் சொல்லி  அவனைப் பற்றி எல்லோரும்  சிரிப்பார்கள்.


அவன் வகுப்பு முழுவதும் ஏன் கல்லூரி முழுவதும் அவனைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். 


அவன் பெயரை யாராவது உச்சரித்தால்போதும், அவர்கள் யாவரும் சிரிப்பதுபோல் அவனுக்குத் தோன்றும்.

விட்டு வந்து விட்டான் .  இப்போது எல்லோர்போலும் மென்பொருள் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் இருக்கிறான். 
அலுவலகத்தில் கூட அவன் பெண்களைச் சந்திக்காமலில்லை.அவர்களிடம் பெரும்பாலும் நேரிடையாகவே பேசமாட்டான். 


அவனை எப்படித் திருத்துவது என்று அவன் அம்மா யோசித்துக் கொண்டிருந்தாள்.  பக்கத்து வீட்டிலிருக்கும் நித்யா உதவியை அவள் நாடினாள். 
பெண்களிடம் பேசும்போது அவனுக்கு ஏற்படும் தாழ்வு மன்பான்மையை அவளிடம் அவன் அம்மா சொன்னாள்.  அவள் எதாவது முயற்சி செய்து அவனிடம் பேசி அவனைச் சரியான வழிக்குக் கொண்டு வரும்படி கேட்டுக்கொண்டாள் அவன் அம்மா.


“சரி” என்றாள் நித்யா.  அவன் வீட்டை விட்டு வெளியே வரும்போது அவன் முன்னால் நின்று புன்னகைப் புரிய ஆரம்பித்தாள் நித்யா.


பெரிய ஆபத்து என்று நினைத்துக்கொண்டான் அவன். அவள் கண்ணில் பட்டால் ஓடி ஒளிந்து கொண்டான். 


நித்யா அவன் வீட்டிற்குள் அவன் அம்மாவிடம் உரிமையுடன் உரையாடிக்கொண்டிருந்தாள்.   “அவள் ஏன் அடிக்கடி இங்கே வருகிறாள்/” என்று கேட்டான்.


அவன் அம்மா, ,” உன்னைப் பார்க்கத்தான் வருகிறாள்,” என்று சொன்னாள்.  அவளை வரச் சொல்லாதே என்றான் கோபமாக.


வழக்கம் போல் நித்யா ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்தாள்.  அவன் கடுகடுப்பாகி விட்டான்.


அவன் ஓடிப்போய் ஒரு அறையில் ஒளிந்து கொண்டான்.  அவள் அந்த அறையைக் கண்டுபிடித்து அங்கு வந்தாள். அவனிடம் பேச முயன்றாள்.  “நீ இனிமேல் இங்கு வராதே,” என்றான்.  அவள்,  “வரத்தான் வருவேன்.  உன்னைப் பார்க்கத்தான் வருகிறேன்.” என்றாள்.


அவன் ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்தான்.    

One Comment on “அஞ்சலட்டைக் கதை”

  1. பிறகு அன்றிரவு தன் கை தொட்ட அவளது பட்டுக் கன்ன ஞாபகத்தில் மீண்டும் எப்போது நித்யா வருவாள்.. அவளை அறையலாம் என்று காத்திருந்தான்!
    சிறகு இரவி

Comments are closed.