பறவைகளின் பண்பு/விஜயலக்ஷ்மி கண்ணன்

அது ஒருத் தெருவோர வெற்றிலை பாக்கு க் கடை. அந்த கடைக்கு சொந்தக்காரர் ஜீவா. வெற்றிலைப் பாக்கு தவிர வேறு சில தின்பண்டங்கள், சோடா, குடத்தில் மோர் ஆகியவையும் அடங்கும்.
பக்கதில் சிமெண்ட் தொட்டி ஒன்று ,சுமார் இரண்டு அடி உயரம் இருக்கலாம் அதில் தண்ணீர் ஊற்றி வைத்து விடுவான். தொட்டியை ஒட்டினார் போல தழைத்து வளர்ந்து நிழல் கொடுக்கும் கொய்யா மரம் ஓங்கி உயர்ந்து நிற்கும்.

அன்று காலையில் கடையைத் திறந்த ஜீவா பக்கத்து தொட்டி சுவர்கள் க்குள் அதிசயம் ஒன்று கண்டான். தாய் குருவி ஒன்று தன்
மூன்று குட்டி குஞ்சுகளை , மூக்கால் கொத்தி கொத்தி அன்பை புகட்டிய காட்சியை பார்த்து அங்கே யே சில நிமிடங்கள் உட்கார்ந்து விட்டா ன்.

ஜீவாவின் தந்தை காலையிலேயே வயலுக்குப் போய்விடுவார்.
அந்த ஊர்க்காரர் ஒருவர் வெளியூரில் இருப்பதால் வயலை குத்தகை க்கு ஜீவாவின் தந்தையிடம்க் கொடுத்திருந்தார்.

ஜீவாவின் தாய் அன்னம்மா வீட்டு க்கும் கடைக்கும் இடையே போய் வர வேண்டும்.
அப்படித்தான் இப்பொழுது அன்னம்மா “ஏண்டா ஜீவா, இன்னுமா கடையைத் திறக்கல?என்ன வேடிக்கை பார்க்கிறாய்” என்று சொல்லி விட்டு தானும் அருகில் நகர்ந்து பார்த்தவள் அப்படியே நின்றுவிட்டாள்.
“ஐயா, என்ன அழகுடா, எடுத்துக் கொஞ்சலாம் போல் இருக்கே!”என்று சின்ன குழந்தைப் போல தோன்றின தாயைப் பார்த்து ஜீவா,” இப்ப நீயே குழந்தை போல் ஆயிட்ட பாரு “என்றான்.
தாய் குருவி குஞ்சுகளைப் சிறகுகள் கொண்டுப் பொத்தி பொத்தி வைத்தது.
அங்கு அருகில் நின்றவர்கள் மேல் நம்பிக்கை வரவில்லை.. குஞ்சுகளை எடுத்துச் சென்று விடுவார்களோ என்றே அஞ்சியது.
மூன்று குஞ்சுகளும் ஒன்றோடு ஒன்று உரசி தாயின் அருகில் அந்த சூடுக்காக இதம் கண்டு கொண்டிருந்தது.
“சரிடா,கடைய திற. நான் காவல் இருக்கேன்” என்று சொல்லி சற்றே தூரம் விலகி உட்கார்ந்து கொண்டாள் அன்னம்மா.
பக்கத்தில் இருந்த கொய்யா மரத்தின் கிளையில் கூடு கட்டி குஞ்சு பொரிக்கும் வரை பரம ரகசியம். குஞ்சு வெளி வந்தது என்பது தெரிந்து கீழே இறங்கிய குருவியின் சாமர்த்தியத்தை என்ன என்று சொல்ல?
தாய்மை நிலை எல்லா ஜீவன்கள் உள்ளும் வைத்தது ஆண்டவனின் செயல்.தன் குஞ்சுகளும் குழந்தைகளும் சுதந்திரமாக நடமாடும் வரை தாய் கூடவே ஓட்டிக் கொண்டிருக்கும்.
இன்னும் இரண்டு நாட்கள் கழித்து பாருங்களேன்.
குஞ்சுகள் பறந்து விடும்.தாய்க் குருவியும் கண்டு கொள்ளாமல் பறந்து சென்று விடும்.
“ஜீவா, கொஞ்சமா பால் எடுத்து வாடா.பாவம் குஞ்சுகள்.”என்று சொல்லியது இன்னொரு தாய் உள்ளம்.
சின்ன அகல மண் கிண்ணத்தில் பால் எடுத்து வைத்துக் கொண்டு அம்மாவிடம் கொடுத்தான்.ஒரு குண்டு பஞ்சும் கொடுத்தான்.
அன்னம்மா பஞ்சை பாலில் தோய்த்து குஞ்சுகளுக்கு. அருகில் வைத்த வுடன் பெரிய குருவிக்கு நம்பிக்கை வந்தது.
குஞ்சுகளும் அதுவுமாக மெல்ல மெல்லக் கிட்டே வந்து பாலை உறிஞ்சி உறிஞ்சி எடுத்து குடித்து கொண்டிருந்ததை
பார்க்கவே அவ்வளவு அழகு.
சற்று நேரத்தில் மேலே கூட்டுக்குள் போய் பதுங்கி விட்டன. தாய் குருவி மட்டும் இரை தேடி சென்றுவந்தது.

இரண்டு நாட்கள் ஓடி விட்டன.
மூன்றாம் நாள் கூடும் விரிந்து கிடந்தது.குஞ்சுகளும் பறந்து விட்டன. தாய் குருவி ஒன்றுமே நடக்காதது போல் இங்கும் அங்குமாக பறந்து சென்று கொண்டிருந்தது.