புஷ்பால ஜெயக்குமார்
எல்லோரும் உறங்கி விட்டார்கள்
எனக்கான இரவு
வழங்கப் பட்டு விட்டது
நான் எனது தனிமையின்
மடியில் இருக்கிறேன்
கசப்பான உன்மைகள்
மிதந்து மிதந்து
மேலே வருகிறது
உறக்கத்திற்கு அப்பாலும்
நான் உயிருடன்
இருப்பதற்குக் காரணம்
காட்டிய பாதையில்
நான் சிந்திய
முழுமையற்ற முடிவுகளை
கடந்து போகிறேன்
வழியெங்கும் காத்திருக்கும்
வெறிச்சோடி வரும்
வாசல் நினைவுகள்
முன்னும் பின்னும் நகர்வது
இதயத்தின் ஒலியிலும் ஒத்திசைவிலும்
ஞாபகங்கள் கரைந்து
வெற்றிடத்தை உருவாக்க
கிணற்றின் நீரை அள்ளும்
வாளியின் சத்தம்
வாழ்நாள் எல்லாம்
——புஷ்பால ஜெயக்குமார்
