
திருவல்லிக்கேணிக்கும்
ஜார்ஜ் டவுனுக்கும்
ஹை…ஹை என்று
சுறு சுறுப்பாக
காலடிக் குளம்புகளின்
தாளகதியில்
கம்பீரமாய் வக்கீல்களை
நீதி மன்றம்
சுமந்து சென்ற ஜட்கா
இப்போது காணாமல்
போய்விட்டது!
சில இடங்களில்
காட்சிப் பொருளாய்
இருக்கிறது!
சில இடங்களில்
பிணங்களை சுமக்கிறது!
இருப்பினும் ஜட்காவின்
புராணத்தைச் சொல்வதில்
புளகாங்கிதம் கொள்ளும்
அந்த வக்கில் நண்பர்கள்
கடற்கரையில் ஜிலு ஜிலு
காற்றைத் துய்த்தபடி
சிலாகித்து மகிழ்கையில்
அருகில் வந்து நின்ற
மெலிந்த குதிரையின்
மேனி துர் நாற்றம்
நாசியைத் துளைக்க
வக்கீல்கள் நடையைக் கட்டினர்
வீடு நோக்கி!
16-06-2023
