அப்பா/விருகை சங்கரன்

நான் காணும்
இன்றைய சொர்க்கம்
உன் அன்றைய
உழைப்பினால்.

என் பள்ளிப் படிப்பு
நீ போட்ட சுழியில்
துவங்கியதே!

என் மேற்படிப்பிற்கு
உன் மருத்துவத்
தொழிலுக்கு
விடுமுறை விட்டு
நீ ஏறி இறங்கிய
படிகளை எப்படி மறப்பேன்?

எனக்குள்ள
இசைஞானத்தை
முதலில் உணர்ந்து
பயிற்றுவிக்க
இசைஆசானை இல்லத்திற்கே
தருவித்த பாங்கு
இன்று நினைக்கையில்
நெஞ்சு கனக்கிறதே!

பாசத்தைப் உன்
பசங்களுக்குப்
பிழிந்தளித்தாய்!
வாழ்வில்
உழைப்பே
உன் மந்திரம்!
கேளிக்கை என்றால்
என்னவென்று
நீ தேடியதில்லை!

அனைவரையும்
இல்லறத்திலாழ்த்தி
மகிழ்வுற்றாய்!
உனை நாங்கள்
ஆராட்டும்
நேரத்தில்
இதுபோதுமென
கண்ணயர்ந்தாய்!

வாழ்வில்
நீ பெறாதவற்றை
எமக்குப் பெற்றுத்
தந்தாய்!

என் பாசமிகு
தந்தையே!
இந்த தந்தையர் தினத்தில்
எனது நினைவலைகளை
மலர்களாய்
உன் பாதத்தில்! 💐

நீ ஒரு வழிகாட்டி
முட்கள் நிறைந்த
இவ் வாழ்க்கைப்
பயணத்திலே! 🙏