பிரஸ்னோபநிடதம் / எஸ்ஸார்சி

ஷஸ்த பிர்ஸ்னா
வினா 6.

சுகேசனும் பிப்பலாதரும்

  1. பரத்வாஜனின் குமாரன் சுகேசன் வினா வைத்தார்.

’ஓ பகவானே ஹிரண்யகர்பனே,கோசல நாட்டு இளவரசன் என்னிடம் வந்து இப்படி கேள்வி கேட்டான். ‘ஓ பரத்வாஜனே,புருஷனின் 16 காலங்களை அறிந்தோனா நீ,? அந்த இளைஞனிடம் சொன்னேன்.’ நான் அவனை அறியேன். எனக்குத்தெரிந்தால் நான் ஏன் சொல்லாமல் இருக்கப்போகிறேன். உண்மையில்லாததைப் பேசுவோன் அடிவேரிலிருந்து ஒன்றுமில்லாமல் உலர்ந்தேபோவான்ஆக நான் உண்மையில்லாதைப்பேசமாட்டேன். சொல்லிய பின், தேரில் ஏறி அமைதிஆனான்.. ஆகத்தான் நான் கேட்கிறேன். புருஷன் என்றால் அது யார்?

  1. அவர் பதில் சொன்னார். அற்புதமான இளைஞனே! 16 காலங்களும் பிறக்கும் அந்த புருஷன் இந்த சரீரத்திலும் உள்ளான்.
  2. யார் விடைபெற்றால் நான் விடைபெறவேண்டும், யார் இருந்தால் நான் இருக்கவேண்டும் ‘புருஷன் வினா..
  3. புருஷனே பிராணனை உருவாக்கினான். பிராணனிலிருந்து கிடைத்தவை நம்பிக்கை,ஆகாயம்,காற்று,தீ,
    நீர், மண் உணர்வுறுப்புக்கள்,

மனம், உணவு, உணவிலிருந்து சக்தி, தியானம், மந்திரங்கள் காரியங்கள், உலகங்களின் பெயர்கூட

  1. ஆறுகள் ஓடி கடலை அடைகின்றன. பேரும் உருவமும் அவை இழந்து கடலாகின்றன. அப்படி 16 காலங்களும் புருஷனில் மறைந்து புருஷனாகவே ஆகின்றன. பிரிவுகளற்று அழிவில்லாத ஒன்றாக ஆகிவிடுறது அது. இப்படிச் சொல்கிறது இவ்வரி.
  2. சக்கரத்தின் ஆரக்கம்பிகள் ஒப்ப 16 காலங்கள் புருஷனில் அமைகிறது. இறப்பு பாதிக்காத ஒரு நிலையை நீ எய்துகிறாய்.
  3. பிப்லாதர் பிறகு அவர்களிடம் சொன்னார். உயர்ந்த பிரம்மனை இவ்வளவு மட்டுமே நான் அறிவேன். இதற்கு மேல் ஒன்றுமில்லை.
  4. அனைவரும் உம்மைப் பிரார்தித்து வணங்குகிறோம். உயர்ந்த முனியே வணங்குகிறோம் மிக உயர்ந்த முனியே, அறியாமை சமுத்திரத்தை கடக்க உதவும் தாங்களே எங்கள் அனைவருக்கும் பிதா.