மறந்துபோன குடை/ரவி உதயன்

மழைதூறுகிற மாலைநேரம்
நனைந்து நடந்து கொண்டிருந்தேன்.

ஓடிவந்து
கறுப்புக்குடை விரித்துத்தந்தாய்.

அதனடியில் அடைக்கலம் புகுந்து
வீடு சேர்ந்தேன்

இன்று
ஓசையின்றி பெய்கிறது
நீண்ட மழை

எங்கு
நனைந்து கொண்டிருக்கிறாயோ
அறியேன்.

தெரிந்திருப்பின்
எடுத்து வந்திருப்பேன்.

திருப்பித்தர
மறந்துபோன
உன் குடையுடன்

2 Comments on “மறந்துபோன குடை/ரவி உதயன்”

Comments are closed.