இனி என்ன செய்வது?/விஜயலக்ஷ்மி கண்ணன்

1.

கறுப்பி என்று அழைத்தது கண்ணாடி,
காற்றுக்கு வேற்றுமை இல்லை என்றது,
மழை சாயம் கரைக்க முயன்றது,
இனி என்ன செய்வது?

2.

காசி ராமேஸ்வரம் சென்று வந்தாச்சு
பசு பக்ஷிக்கு உணவுப் போட்டாச்சு
சனி அன்று எண்ணெய் விளக்கு
இனி என்ன செய்வது?