கவிஞர் கண்ணதாசன்ஒரு கல்லூரிக்கவியரங்கத்தில் கலந்துகொண்டு…..

கவிஞர் கண்ணதாசன்ஒரு கல்லூரிக்
கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை
வாசிக்க ஆரம்பித்தார்.

அரங்கத்தில் உற்சாக_ஆரவாரம் எழுந்தது.

அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு_
வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது.

வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க_
வெகுநேரம் பிடித்தது.

கைதட்டல்கள் முடிந்ததும்,
கண்ணதாசன்சொன்னார்,

‘இன்று நான் வாசித்தகவிதை நான்
எழுதியது அல்ல.

உங்கள் கல்லூரி மாணவர்ஒருவர் நேற்று
ஒரு கவிதை எடுத்துக்கொண்டு வந்து
என்னிடம் காண்பித்தார்.

அது மிக நன்றாக இருந்தது.

எனவே நான் எழுதியகவிதையை அவரை
வாசிக்க சொல்லிவிட்டுஅவர் எழுதிய
கவிதையை நான் வாசித்தேன்.

என் கவிதையை அவர் வாசிக்கும்போது_
எந்தவித ஆரவாரமும் இல்லை.

அவர் எழுதியகவிதையை நான் வாசித்தபோது
பலத்த வரவேற்பு.

ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம்_
பார்க்கிறதே ஒழிய,

சொல்லும் பொருளைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான்உண்மை என்று புரிகிறது.”

ஒரு பிரபலமானவன் முயலுக்கு மூன்று கால்கள்_
மட்டும்தான்என்று சொன்னாலும் ஆமாம் என்று சொல்லும்
சமுதாயத்தில் தான்_நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..!!

முகநூல் தகவல் : சுரேஷ் ராஜகோபால்