


இன்று சுதந்திர தினம்
நான் நாட்டுப்பற்றுடையவன்
தேசிய கீதத்தின் சொற்கள் எனக்கு
சரிவரத் தெரியாது
ஆனால் கால் வலித்தாலும் எழுந்து நின்று வாயசைப்பேன்
அருகில் யாராவது இருந்தால்
அவர்களையும்
நிற்க வைப்பேன்
அவர்
சக்கர நாற்காலியில் இருந்தால்
பிடித்து தூக்கி
இன்று சுதந்திர தினம்
நான் நாட்டுப்பற்றுடையவன்
எங்கள் வீட்டின் மேல்
சரியான நீள அகலத்தில்
மூவர்ணத்தில்
ஏக விலைக்கு வாங்கிய கொடி பறக்குது பார்
பக்கத்தில் உள்ள
அத்தனை வீடுகளிலும்
பறக்கும் கொடிகளுக்கு
எனது உடற்பயிற்சியும்
உருட்டு கட்டையுமே காரணம்
எல்லார் சட்டையிலும்
என் செலவில்
வாங்கிய கொடி
குத்தப்பட்டிருக்கிறது பார்
இல்லாவிட்டால் விடுவேனா நான்?
இன்று சுதந்திர தினம்
நான் நாட்டுப்பற்றுடையவன்
எனது உள்ளாடை உட்பட
அனைத்து ஆடைகளிலும்
எங்கேயாவது
உண்டு
நாட்டின் கொடி
இன்று
தொலைகாட்சியில்
நாட்டுபற்றை வலியுறுத்தும்
அனைத்து மொழி படங்களையும்
பார்ப்பேன்
புரியாவிட்டாலும்
என் குடும்பத்தினரையும்
பார்க்க வைப்பேன்
நான் நாட்டுப்பற்றுடையவன்
இன்று சுதந்திர தினம்

நாட்டுப் பற்று இதம்.
அருமை