நரியும் நாரையும்

லேவ் தல்ஸ்தோய்

நரி ஒன்று நாரையை விருந்துக்கு அழைத்து, உணவை ஒரு தட்டில் பரிமாறியது. தனது நீண்ட அலகினால் நாரை எதையுமே சாப்பிட முடியவில்லை. நரியே எல்லாவற்றையும் சாப்பிட்டு முடித்தது. அடுத்த நாள் நாரை நரியை விருந்துக்கு அழைத்து ஒடுங்கிய வாயுள்ள ஜாடியில் உணவு பரிமாறியது. நரியால் தனது மூஞ்சியை ஜாடிக்குள் நுழைக்க முடியவில்லை. ஆனால் நாரை தனது நீண்ட கழுத்தை ஜாடிக்குள் விட்டு எல்லாவற்றையும் தானே குடித்தது.