
மகன் சஞ்சய்காந்தி விமான விபத்தில் பலியானபோது மிகவும் அதிர்ந்து போய் இருந்தார் இந்திரா..!
அந்த துக்கத்தை தாங்க முடியாமல் தவித்து புழுங்கினார்..!
தன்னிடம் ஆறுதல் சொல்ல வருபவர்கள் முன்பு, ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டால்கூட அவர்கள் மனம் பாதிக்கப்படும் என்று தன்னுடைய முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டார்..!
அப்போது, இந்திராவை பார்த்து ஆறுதல் சொல்ல, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ் குப்தா வருகிறார்..!
பூபேஷ் குப்தா லண்டனில் இந்திராவுடனும், அவரது கணவர் பெரோஸ் காந்தியுடனும் ஒன்றாக படித்தவர்..!
பூபேஷ் குப்தாவை பார்த்ததுமே சுக்குநூறாக இந்திரா உடைந்து விட்டார். அதுவரை திடமாக இருந்தவர் தேம்பி தேம்பி அழ துவங்கிவிட்டார்..!
அவரை ஆறுதல் படுத்திய பூபேஷ், சற்று நேரத்தில் விடை பெற்று சென்றுவிட்டார்.
அவர் போனபிறகு பார்த்தால், மறந்துபோய் பூபேஷ் தனது செருப்புகளை அங்கேயே விட்டுவிட்டு போயிருக்கிறார். அடுத்த வினாடியே அந்த செருப்புகளை தன் கைகளால் எடுத்து கொண்டு வெளியே ஓடுகிறார் இந்திரா.
பூபேஷ் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் வந்திருந்தார்..!
“பூபேஷ் ஜி..! இதோ உங்கள் செப்பல்..!” என்று ரிக்ஷாவில் ஏறிக் கொண்டிருந்தவரிடம் மூச்சிரைக்க ஓடிவந்து தருகிறார் இந்திரா… பூபேஷ் குப்தா ஒரு கணம் திகைத்து போகிறார்.
இப்போது அவரது கண்களிலிருந்தும் கண்ணீர்..!
எத்தனை பேரிடம் தென்படும் இந்த மாண்பு?
அது தான் இந்திரா..❤️
சங்கு சுட்டாலும் வெண்மையே தரும்.
- ஹேமவந்தனா ரவீந்திரதாஸ் பதிவு.
மீள்…
