தற்போதைய புகழை எப்படிப் பார்க்கிறீர்கள் ?

நான் தாய் மாமா பொண்ண தான் கல்யாணம் பண்ணேன். சினிமால இயக்குனர் ஆகணும்னு ஓடிட்ருந்த போது என் வருமானம் தெரியாது, எங்க வேலை பாக்குரேன்னு தெரியாது, அவளுக்கு தெரிஞ்சதெல்லாம் நாந்தான் ! இந்த 28 வருஷ திருமண வாழ்க்கைல இந்த 7 வருஷம் தான் நிறைவான வாழ்க்கை ! மற்றபடி அத்தனையும் போராட்டம் தான். ஆனா அதிலயும் அன்பும் பாசமும் தான் இருந்தோம்.

ரெண்டு குழந்தைகள். அப்பா எதையாவது பண்ணிடுவாருன்னு சின்ன புள்ளைங்களோட ஏக்கம் இருந்துச்சு ! என்னிக்காவது ஒரு நாள் மாமா எப்படியாவது முன்னேறிடுவார்னு காத்திருந்தாங்க என் மனைவி. அந்த ஓட்டத்திற்கு இப்ப ஒரு வெகுமதி கிடைச்சிருக்கு. இப்ப ரொம்ப ஹேப்பியா, ரிலாக்ஸ்டா இருக்காங்க ! குடும்பத்த சந்தோசமா வச்சிருக்கிறோம் அப்படிங்கிற எண்ணம் எனக்கு ஒரு பெரிய எனர்ஜியா இருக்கு. பொது இடங்களுக்கு செல்லும்போது எனக்குக் கிடைக்கக் கூடிய வரவேற்பு, ஆர்ப்பரிப்பு, போட்டோ எடுக்க மக்கள் முந்துவது இதெல்லாம் பாத்து எனது மனைவி முகத்தில் ஒரு பெருமிதத்தை பார்ப்பேன். அப்ப அவங்க எப்படி ரியாக்ட் பன்றாங்கனு கவனித்துப் பார்ப்பேன், அடடா நம்ம மாமா எவ்வளவு கலக்குறாரு என அவள் மனது நிறைஞ்சு கண்ல பொங்கும். இதெல்லாம் பார்ப்பது தான் என் சந்தோசமே !

இது தனது மனைவியுடன் திரு.மாரிமுத்து கடந்த வாரம் அளித்த பேட்டி.

வாழ்வின் சிரமங்களிலும் சோகங்களிலும் நல்லபடியாய் கடக்க வைத்து, பேர், புகழ் என வாழத் துவங்கும் போது சடாரென அனைத்தையும் முடித்து வைக்கும், காலம் ஏன் இவ்வளவு இரக்கமற்றதாய் இருக்கிறது ?