எனக்குத் தூக்கம் வருகிறது!/அழகியசிங்கர்

சாப்பிட்டவுடன்
எனக்குத் தூக்கம்
வருகிறது.

கண்ணை மூடிக்கொண்டு சில நிமிடங்கள்
தூங்கா விட்டால் தட்டாமாலை
சுற்றுவதுபோல் தோன்றுகிறது.

எத்தனையோ இருக்கிறது தூக்கம்தான்
இப்போது
முக்கியம்

இருந்து விட்டுப்
போகட்டும் எல்லாம்
என்று விட்டு விடுகிறேன்

எழுதி என்ன பயனைக் கண்டோம்
ஒன்றுமில்லை
படிப்பதால் என்ன ஞானம்
ஏற்படப் போகிறது?

தூங்கும் போது கவலை இல்லாமல் தூங்கலாம்.

தூக்கத்தைக்
கெடுத்துக் கொண்டு
எழுதுவதிலோ
படிப்பதிலோ விருப்பமில்லை.

தூக்கம் வருவதால் தூங்குகிறேன் தூங்குகிறேன்.