
(கவிதை அமர்வு
29/9/23
எஸ்ஸார்சி வாசித்த கவிதை)
நிற்பதும் நடப்பதும்
அவன் செயலாலே
சென்னையில் ஆண்டுக்காண்டு
அக்டோபர் நவம்பரில்
மழைவெள்ளம்
சாலைகள் நாஸ்தி
வீட்டிற்குள் சாக்கடையோடு
குடிநீர் புகும்
சர்ப்பம் எழும் ஆமை புகும்
காரோடும் ரோட்டில் படகோடும்
மழைநீர் வடியக்கால்வாய்
ஓயாமல் வெட்டு
காசு கொட்டும்
பாலங்கள் ஷட்டர்கள் கட் அண் கவர் கால்வாய்கள்
இவை தருவிக்குமே
சொர்ண மழை.
ரோடு போடுவது ஆண்டுக்காண்டு.
பத்து நாளே அதிகம்
பல் இளிக்கும்
டைவர்சில் கருப்புத்தாரும்
கருங்கல் ஜல்லியும்
நிஃப்டி பிஃப்டி காண்ட்ராக்ட்
வேறென்ன?
மஞ்சள் வண்ணமடித்த
பள்ளிக்கூடங்களுக்கு
விடுமுறை
ஆற்றங்கரை பள்ளக்கை வாசிகள் வருகை.
ஆனியன் பச்சடி
ஆவிபறக்கும் பிரியாணி
விநியோகம்
வெள்ள நிவாரணமாய்
மளிகைப்பொருள் சமுக்காளம்
போர்வை வேட்டி அணிவரிசை
மழைன்னா ஜோரா பேயுணும்
உடாம பேயுணும்
நாம நாலு காசு பாக்குறது எப்பிடி?
அங்கங்கே பேசிக்கொள்கிறார்கள்
எல்லோரும் தான்.

யதார்த்தம்!👏👌🌺