
இணையக் காலக் கவியரங்கம்
நாள் 27.11.23
000
டியும் காபியும்
வழுக்கும் வண்ணப் பெயர்ப் பலகையில்
ஆவி பறக்கிறது…
பத்து ரூபாய்
பதினைந்து ரூபாய்
இருபது ரூபாய்
எனக் கண்ணாடி டம்ளர் கள்
டீயுதடுகளோடும்
காபியுதடுகளோடும்
அலையும் பைத்தியக்காரர்களை
விழுங்கக் காத்திருக்கின்றன…
சுவை வணிகம்
சூடாய் ஆவி பறக்கிறது..
