அனங்கன்/ஒரு ஆன்மா தெருவில் கிடக்கிறது

வாழ்ந்தமனிதரை நினைவுகூற ஒன்றுமில்லை…
அவர்சேர்த்துவைத்த நூல்களைத் தவிர.

சொத்தினைச் சமமாய்ப்பிரித்துக்கொண்டவர்கள்…சொல்லிவைத்தார்போல் தட்டிக்கழித்தது நூல்களைத்தான்.

கோணிப்பையில் குப்பையாய்த் திணித்து எடைக்குப்போட்டுவந்த வேலைக்காரனுக்குத் தெரியும்… இறந்துபோனவர் அவைகளை எங்ஙனம்
பாதுகாத்தாரென்று…

அப்பாவிற்குப் பிடித்ததைப் படையல்போட்டவர்கள்…
ஒருநூலையும் வாங்கிவைத்திருக்கலாம்.

புத்தகம் இருந்தஅலமாரிகள் நல்ல கருந்தேக்கென்று சண்டைநடக்கிறது இப்போது…

புத்தகத்தோடு தெருவில் கிடக்கிறது…அவரது ஆன்மாவும்.


♦.