
நினைத்த மாத்திரம் உணர்வைத் தூண்டும்,
நம் முண்டாசு கவியின் பாடல்கள்.
அச்சமில்லை அச்சமில்லை,அச்சமென்பதில்லையே என்றபோது ,
மன திடமும் உறுதியும் பொங்கி எழுந்தன.
பெண்கள் சுதந்திரம் அடைந்து விட்டால்
நாடும் விடுதலை. அடையும் நம்பினார்.
எட்டயபுரம் ஈன்ற பெரும் தலைவன்
எட்டா உயரம் அடைந்த மகாகவி.
என்றும் நம்முடன் வாழும் மீசைக்காரர்
பாரதி கொடுத்தக் கொடை.
