பெரு . விஷ்ணுகுமார்/நூதனக் கிறுக்கன்

(தமிழவன் தொகுத்த இளையவர்களின் புதுக்கவிதைகள் என்ற தொகுப்பிலிருந்து )

ஓ அவரைப் பற்றிய கேட்கிறீர் உண்மையாகவே அவரைப் பற்றிய கேட்கிறீர்.
அவர் நூதனமான கிறுக்கனாயிற்றே

தன் கண் காது தும்ம லிடும் துளைகளை யெல்லாம்
அடிக்கடி இடம் மாற்றிக் கொள்வார்

டம்பளருக்குள் இறங்கி குளித்துக் கொண்டிருப்பார்

தலையணை யுறைக்குள்
மொட்டை மாடியை நுழைத்துக்கொண்டிருப்பார்.

சட்டை பொத்தான்களை மாத்திரைகளை விழுங்கிக்கொண்டி ருப்பார்

உயரதிகாரி ஒருவரை அறைந்து கொண்டிருப்பார்

இன்றேல் அந்தப் பக்கம்
யாரிடமாவது போய் அவரைப் பற்றிய விசாரித்துக்கொண்டிருப்பார்.

(ழ என்ற பாதையில் நடப்பவன்)