
சொல் புதிது, இணைய கால, 61வது கவி அரங்கம், தேதி 19.12 2023 கிழமை செவ்வாய், நேரம் மாலை 05.10,”பூனையின் மொழி” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால்.
மரத்திலிருந்து கீழே குதித்த
பூனை ஒன்று எதிரே அமர்ந்தது
“மியாவ்” என்ற போது புரியாமல்
“என்ன சொல்கிறாய்?” என்றே கேட்டேன்
வீட்டில் பழகிய பூனையானதால்
உரிமையுடன் உள்ளே சென்றது
மகன் ஓடிவந்து சிறுதட்டினில்
பால் எடுத்து வைத்தான்.
சத்தமிடாமல் சாப்பிட்டுச் சென்றது
“மியாவ்”வின் அர்த்தம் இப்போது புரிந்தது….
சிட்லபாக்கம்
19 12 2023 மாலை 05.10
