மனுஷ்ய புத்திரன்/நிழல் விழும் புல்வெளி

(விருட்சம் நடத்தும் 62வது இணைய கால கவி அரங்கத்தில் வாசித்தது)

நான் வெறும் நிழல் தான்.
என்னைத் தாண்டி கொண்டு போவதில்
ஒரு பிரச்சனையும் இல்லை.

மிதித்துக் கொண்டு நடக்கும்
அந்த நிழல் விழும்புல்வெளியில்தான்
ஒரு காலத்தில்
நாம் பனித்துளிகளாக அருகருகே பூத்திருந்தோம்
என்பதும் உண்மைதான்

சீக்கிரமே உலர்ந்து போவோம்
என்பது கூட தெரியாமல்.

நன்றி மனுஷ்ய புத்திரன்

(நீயே என் கடைசிப் பெண்ணாக இரு
என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து எடுத்தது)