ஹரணி கவிதை

, இணையக் காலக் கவியரங்கம் நாள் 23.12.23

சருகு
இறகு

இரண்டும்
உதிர்வுகள்

ஒன்று மரத்தின்
வரலாற்றை..
இன்னொன்று பறவையின்
வரலாற்றை..

ஒன்றில் பூமி
இன்னொன்றில் வானம்..

இரண்டும்
வாழ்வின் உண்மையை..

வானமும் பூமியும்
என்றும் அழாயாதவை..

மற்றவை யாவும்
சருகு அல்லது இறகு..