புவனா சந்திரசேகரன்/நிறைவைத் தேடும் உயிர்

66 ஆவது இணைய காலக் கவியரங்கம்

கலைந்து போன கனவுகள்!
கசக்கிப் போட்ட காகிதங்கள்!
முடிக்காத சித்திரங்கள்!

நடப்பதைப் பாதியில் நிறுத்தித்
திரும்பிய பயணங்கள்!
ஆரம்பித்துப் பாதியில்
கைவிட்ட செயல்கள்!
நிறைவேற்ற முடியாமல்
கைவிட்ட ஆசைகள்!

எல்லாவற்றிலும்
நிஜமான என்னைக்
கொஞ்சம் கொஞ்சமாகத்
தொலைத்துவிட்டுப்
குறைந்து மறைந்த நான்
பிறைநிலவாக இன்று
பயணத்தைத் தொடர்கிறேன்!

எனது கடமைகளில்
உங்கள் விருப்பங்களில்
உங்கள் வாசிப்பில்
உங்கள் ஆசைகளில்
இன்றைய நானாக மாறி
புதிய வாழ்வு வாழ்கிறேன்!
நிஜமான நிறைவைத் தேடி!


24/12/2023.