அழகியசிங்கர்/டாக்டரைப் பார்க்க வேண்டாம்

  1. டாக்டரைப் பார்க்க
    உங்களுக்குப் பயம்
    இயல்பாய் அவரை
    வரவேற்க மாட்டோம்
    ஊசி போட்டால்
    என்ன ஆகுமோ ?
    டாக்டரைப் பார்க்க வேண்டாம்

2.டாக்டர் நம்மிடம் எப்போதும்
பேசமாட்டார்
என்ன வியாதி
என்று சொல்லமாட்டார்
எத்தனை நாள் குணமாகுமென்று
கூறமாட்டார்
டாக்டரைப் பார்க்க வேண்டாம்

3.அப்பாவிற்கு 94வயது
நடந்து கொண்டிருந்தது
அப்பா டாக்டரிடம்
போகவில்லை ஒருநாளும்
மாத்திரை மருந்து
என்றும் எடுத்ததில்லை
டாக்டரைப் பார்க்க
வேண்டாம்
மழையில் குடை
நனைகிறது இதயம்.