அழகியசிங்கர்/ஜோல்னா பைகள் 2

நான்
விதம்விதமாய்
ஜோல்னாப் பைகள்
வைத்திருப்பவன்
பைகளின் நேசன்
இன்று
ஒரு ஜோல்னாப் பையிலிருந்து
ஒரு
நூல்கண்டு
கிடைக்குமா
என்று
தேடிக்
கொண்டிருக்கிறேன்
புத்தகங்கள்
3 பிரதிகள்
அனுப்ப வேண்டும்
புத்தகங்கள் அனுப்பி
ரொம்ப நாட்கள்
ஆகி விட்டன

எங்கே நூல்கண்டை
வைத்திருக்கிறேனென்று
உலகம்
முழுவதும் தேடிக்
கொண்டிருக்கிறேன்

அடுக்கடுக்காய்
ஜோல்னாப்
பைகள்
கிடைத்துக் கொண்டிருக்கின்றன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன