அழகியசிங்கர்/ஆடு

வீட்டின் வாசலில் மே மே என்று சத்தம். எட்டிப் பார்த்தேன். ஒரு ஆடு நின்றிருந்தது. யார் வீட்டு ஆடு? ஏன் இங்கே வந்து கத்துகிறது.

வெளியே வந்து ஏன் கத்துகிறே என்று கேட்டேன்.

அது ஒரு இடத்தைப் பார்த்துக் கத்தியது. அங்கு
ஒரு பூனை இரண்டு குட்டிகளுடன் இருந்தது.

இப்போது எங்கள் வீட்டில் ஒரு பூனை, இரண்டு குட்டிகள், ஒரு ஆடு.

எல்லோரும் என் நண்பர்கள்.