
காற்றின் விசைகேற்ப
ஆடிகொண்டிருக்கிறது கிளை
எப்போது முறிந்து விழுமோ
பதற்றத்தில் பற்றுவைக்காமல்
மலர்கிறது மலர்
கூடுநெய்கிறது பறவை
இந்த ஆதுரத்தை
இரசிக்கிறது நிலவு..
நாம் ஏன்
மரணம் வருவதற்கு முன்பே
மண்டியிட்டுக் கிடக்கிறோம்?
திரிகருகி முடிக்கும்
முன்
வாழ்ந்து தீர்ப்பது தானே
ஒளியின் தீர்க்கம்.

வாழ்ந்து தீர்ப்பது தானே
ஒளியின் தீர்க்கம்
சிறப்பு