
அறையில் நான்
தனியே இருந்தவரை
அறை காலியாக இல்லை.
ஜன்னலை மூடி
கதவைச் சாத்தி
வெளியே வந்தபின்
அறை காலியாய்
இருக்கிறதெனத்
தோன்றியது.
காலியாகத்தான்
இருக்கிறதாவென
திறந்து பார்த்தால்
மீண்டும் அறையில் நான்.
அறைக் கதவைச்
சாத்தியபின்
அறை காலியாகத்தான்
இருக்கிறதா?.
. 14.06.24.
