சசிகலா விஸ்வநாதன்/நினைவு நாள்

நல் நினைவுகளை
நிலத்தில் விட்டு
செல்பவர்கள், செவ்வனே
சென்று இருப்பர்.
தாபம் அவரை ஒருபோதும் தாக்காது.
இருக்கும் போது
இருந்து வாழ்பவர்,
மறுமையிலும் அவ்வாறே; வருந்தார்.
தீதென அறிந்து
தீச்சொல் அறையார்.
நினைவு நாள்
அனுசரி; தவறில்லை;
நயந்து.
பயந்தல்ல; அன்னமும்,
ஆடையும்,
இன்வார்த்தையும், நற்பொருளும்,
அளி; உன் தகுதியில், அவர்க்கு.
எடுப்பதில் முனைவர்க்கு
கொடுப்பதிலென்ன மனநிறைவு;
உனக்கு? வருடம்
இரு முறை
தம்பியர்,தங்கையருடன்
சேர்ந்து நீத்தோர்
நினைவில் நீந்தி,
இன்புற்று இருக்க உன்னால் முடியுமெனில்
அதுவே நல் நினைவு
நாள்.