தி.சோ. வேணுகோபாலன்/மழை

அநாசாரத்தை
ஆகாசப் புரோகிதன்
முகிற்குட நீரால்
தெளிக்கும் புரோட்சணம்

பழுத்த பாவம்
சுழித்தோட
குளித்த பொருளில்
ஒளிகூடும்