விடு

கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

என்னை எரியவிடு;

இந்த இருள்வெளியில் பிரகாசிக்கும்

தீபத்தைப் போல்

என்னை வளரவிடு;

இந்த அகல் நெருப்பின் ஒளிரும்

தீ ஜுவாலையைப் போல்

என்னை மூழ்கவிடு;

விளக்குழியில் அமிழ்ந்திடும்

எரிதிரியினைப் போல்

என்னை காயவிடு;

வான்வெளியில் மிளிரும்

பகல் நிலவைப் போல்

என்னை தேயவிடு;

தேய்ந்து தேய்ந்து

திரும்ப வளரும் தேய்பிறைப் போல்

நாம் இழப்பதும் இல்லை

எதையும் பெருவதும் இல்லை

19 நவ இரவு 9:17