ஜெயதேவன்/அகாடமி விருதுகள் இப்படித்தான் வாங்கப்படுகின்றனவா?

ஜெயமோகன் அவர்கள் தனது வலை பக்கத்தில் எழுதிய கடிதம் ஒன்று முகநூலில் தட்டுப்பட்டது. அது பிரம்மா இலக்கிய விழா பெங்களூரில் நடைபெற்றது தொடர்பான கடிதம். அதில் கடலூர் சீனு என்ற ஜெயமோகனின் தீவிர வாசகர் கலந்து கொண்டது பற்றி முகநூலில் பல பேர் கண்டனங்களையும் பதிவு செய்திருந்தனர். அதற்கு பதில் சொல்லும் முகமாக கடலூர் சீனு பற்றி நீண்ட கடிதம் எழுதியுள்ளார் ஜெயமோகன்.
கடலூர் சீனு அவர்களின் பெருமையைச் சொல்லி வருகின்ற பொழுது ஒரு விஷயத்தை குறிப்பிட்டார்
அதுதான் சாகித்திய அகாடமி விருதுகளில் எவ்வளவு அரசியல் நடக்கிறது என்பதை ஜெயமோகன் வாயாலேயே பதிவு செய்துள்ளார்
நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் அபிலாஷ் சந்திரன் அவர்களுக்கு யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. அநேகம் அபிலாஷ் சந்திரன் அவர்களுடைய கால்கள் என்ற நாவலுக்காக அது தரப்பட்டது என்று நினைக்கிறேன்.
பிரம்மா இலக்கிய திருவிழா பற்றி அதிகம் கண்டனங்கள் எழுதியவர் அபிலாஷ் சந்திரன் அவர்கள். காரணம் அபிலாஷ் சந்திரன் அவர்கள் வாழ்வது பெங்களூரில். இலக்கிய உலகில் நன்கு பரீட்சையமான பெயர். ஆனாலும் அவரை விட்டு விட்டு அதிகம் அறிமுகம் இல்லாத கடலூர் சீனு அவர்களை அழைத்ததை அவர் கண்டனமாக பதிவு செய்து எழுதி இருந்தார் அதற்கு ஜெயமோகன் எழுதிய கடிதத்தில் தான் விருதுகள் வாங்கும் வித்தையை பற்றி என் போன்ற அப்பாவிகள் புரிந்து கொண்டோம்
அபிலாஷ் அவர்கள் விருது பெற்ற ஆண்டு மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் புதுவை ரசினி என்பவருக்காக சாகித்திய
அகாதமிக்கு உள்ளே லாபி செய்து கொண்டு இருந்தார் என்றும்
இந்த தகவலை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் ஜெயமோகனுக்கு கடத்தி உள்ளார் என்றும் இதை அறிந்த ஜெயமோகன் பிரபஞ்சன் அவர்கள் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். அப்போது தான் இலக்கியத்தில் ஆழ்ந்த வாசிப்பு உள்ள கடலூர் சீனுவிடம் இதை பற்றி பேசி உள்ளார்
அவர்தான் “என்னுடைய சாய்ஸ் அபிலாஷ் சந்திரன் அவர்கள்தான். நல்ல எழுத்தாளர் “என்று ஜெயமோகனிடம் பரிந்துரை செய்துள்ளார். அவருடைய பரிந்துரையின் பேரிலேயே ஜெயமோகன் அபிலாஷ் சந்திரன் அவர்களை விருது பெற காரணமாக இருந்துள்ளார்.. அவரை பரிந்துரை செய்ததன் மூலமாக கடலூர் சீனுதான் அபிலாஷ் சந்திரன் அவர்கள் விருது பெற முக்கிய காரணம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் .அந்த கடலூர் சீனு வை அழைத்ததை தான் அவர் மூலமே விருது பெற்ற அபிலாஷ் சந்திரன் அவர்கள் விமர்சனம் செய்து எழுதியுள்ளார் என்று அந்த கடிதத்தில் ஜெயமோகன் எழுதியுள்ளார்
இதில் என்ன நடந்தது என்பது நமக்கு முக்கியமல்ல
ஆனால் சாகித்திய அகாடமி விருதுகள் இப்படித்தான் தரப்படுகின்றன பெறப்படுகின்றன என்ற அரசியல் இந்த கடிதம் மூலம் வெட்ட வெளிச்சம் ஆகிறது
அதை வாசித்தவுடன் இதை எழுதத் தோன்றியது எழுதி இருக்கிறேன்.
இதன் உண்மைத் தன்மையை சம்மந்தப்பட்டவர்கள் தான் தெரிவிக்க வேண்டும்