லக்ஷ்மி ரமணன்/நோக்கம்

அபர்ணா மின்விசிறியை ஆன் செய்து விட்டு தன்னைப்பார்க்கவந்த சிநேகிதி மாலதியை உட்காரச்சொல்லியவளாய் தானும் அமர்ந்து பேச ஆரம்பித்தாள்.
தற்செயலாகத்திரும்பிப்பார்த்தமாலதி பின்னால் சற்றுதூரத்தில் நாற்காலியில்
உட்கார்ந்து பத்திரிகைஒன்றைப்படிப்பதில் ஆழ்ந்த போயிருந்த அபர்ணாவின் மாமியார் கண்ணில்பட்டதும் ரகசியக்குரலில்”இது உன்னுடைய ரூம்தானே”என்றாள்.
“ஆமாம் ஏன் கேட்கிறே?”
“உன் மாமியார் இருக்காங்களேன்னு கேட்டேன்”
“இருந்தால் என்ன இது வழக்கமாய் நடக்கிறதுதான்”
“சிநேகிகளுக்குள் மனம்விட்டுப்பேசிக்க எத்தனையோவிஷயம் இருக்கும் .வீட்டுப் பெரியவங்க அதுவும் மாமியார் எதிரில் எப்படி
பேசமுடியும்?”
மாலதியின் தயக்கம் அபர்ணாவுக்குபுரிந்தது
“இது வழக்கமாக இங்கே நடக்கிறதுதான். மாமனார் ஊரிலில்லை. தன் ஒருத்திக்காக
மட்டும் பேன் போட்டுக்கொண்டு கரென்டை வீணடிக்கவேண்டாமே என்கிற நல்ல
எண்ணத்தில்தான் அவங்க இப்படி பண்ணுவதாகச் சொல்லறாங்க. அதுவும் சரிதானே.
மத்தபடி நாம் என்னபேசறோம்னு தெரிஞ்சிக்கிற வேவு பார்க்கிற எண்ணத்தில் இப்படி
செய்யல்லே.இன்னோரு விஷயம் உனக்கு தெரியுமா?அவங்களுங்கு காது கேட்காது.”
திகைத்துப்போன மாலதி மருமகள் மெச்சிய அந்தமாமியாரை ஆர்வத்துடன் பார்த்தாள்.

One Comment on “லக்ஷ்மி ரமணன்/நோக்கம்”

Comments are closed.