முகநூலில் ஜெயதேவன் எழுதியது

தமிழ் திரைப்பட துறைக்கு என்று ஒரு சாபம் இருக்கிறது என்பது தெரியுமா? சில நல்ல படங்கள் வந்து இனி சினிமாத்துறை உண்மையில் கலைத்துறையாக மாறிவிடும் என்று நாம் கற்பனையில் மிதந்து‌ கொண்டிருக்கும் போது
இந்த ஆட்டத்தை கலைப்பதற்காகவே பிறப்பெடுத்த நெல்சன்களும் லோகேஷ் கனகராஜ்களும் உருவாகி ஒரே நாளில் சினிமா துறையின் கலை அழகை சிதைத்து விடுவார்கள்

தங்கலான், வாழை மற்றும் கொட்டுக்காளி, போகும் இடம் வெகு தூரம் இல்லை போன்ற கலை நுட்பமான படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இனி சினிமா துறை மலையாளத் துறையை போல வங்காள திரைப்படத் துறையை போல உருப்பட்டு விடும் என்று நினைப்போம். அப்படி யாராவது நினைத்தால் அந்த நினைப்பை இப்போதே அழி ரப்பர் வைத்து அழித்து விடுங்கள்.
வரலாறு அவ்வாறு காட்டவில்லை

என் வயது உள்ளவர்களுக்கு தெரியும். உதிரிப்பூக்கள் மகேந்திரன் அவர்களும் பாரதிராஜா அவர்களும் ருத்ரய்யா போன்றவர்களும் வந்து தமிழ் சினிமாவின் முகத்தையே மாற்றி கலைத்தன்மையோடு கூடிய அழகான படைப்புகளை தந்து கொண்டு இருந்தார்கள். சரி இந்த திசையில் தான் இனி தமிழ் சினிமா பயணப்படும் என்று நல்ல சினிமா ஆர்வலர்கள் கனவு கண்டு கொண்டிருந்தார்கள்

வந்து எடுத்தார் பாருங்கள் !
அப்பிச்சி ஏவிஎம் அவர்கள்.
இந்த ஆட்டத்தை கலைத்துப் போட்டு விட்டதில் அவருக்கு பெரிய பங்கு உண்டு ..1980
முரட்டுக்காளை அவிழ்த்து விட்டார்

உதிரிப்பூக்கள் போன்ற படங்கள் தான் இனி வரும் என்று நினைக்கிற போது கமல்ஹாசனின் “சகலகலா வல்லவனை” இறக்குமதி செய்து சினிமா திசையை மாற்றி விட்டார் (1982) அதில் விழுந்த சினிமா பிரம்மாண்டத்தையும் செயற்கையும் பொழுதுபோக்கையும் பின்னர் கைவிடவே வில்லை

இப்போதுதான் விடுதலை வாழை போன்ற படங்கள் வந்து சரி கொஞ்சம் நல்ல சினிமா பார்க்கலாம் என்று நினைக்கின்ற பொழுது
இது பொறுக்காத எங்கோ ஒரு தறுதலை இந்நேரம் உருவாகி இருப்பார்…
இந்தியன் 2 தோல்விக்கு காரணம் அதன் கலைத்தன்மை குறைபாடு காரணமாக நல்ல வேலை தோல்வி அடைந்து விட்டது
அது வெற்றி அடைந்திருந்தால்
மறுபடியும் பிரமாண்ட சினிமாக்கள் , pan இந்திய சினிமாக்கள் என்று பொழுதுபோக்குக்காக படம் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள்

பின்னர் லோகேஷ் கனகராஜ் போன்றவர்கள் காட்டில் மழை தான்… இப்படி ஏற்ற இறக்கங்களோடுதான் தமிழ் திரைப்பட உலகம் பயணப்பட்டு வந்துள்ளது

ஒரு ட்ரெண்ட் ஷெட்டர் உருவாகி நல்ல சினிமாவை தருவார் இன்னொரு ஜன ரஞ்சக சினிமாக்காரன் அதை உடைத்துப் போட்டு விட்டுப்
போய்க்கொண்டே இருப்பார்