நெல்லை குரலோன்/கமல்ஹாசனின் தந்தைசீனிவாசன் பேட்டி

25 _ 5 _ 1983ஆனந்த விகடன் இதழிலிருந்து …”மகனுக்குத் தேசிய அவார்டு (‘மூன்றாம் பிறை’) கெடச்சிருக்கு! ஆனா, உங்க முகத்துல அதுக்கான அடையாளத்தையே காணோமே!””சந்தோஷம் இருக்கத்தான் செய்யுது. அதுக்காக தலைகால் புரியாம ஆடச் சொல்றீங்களா?” பளிச்சென்று கேட்கிறார் பரமக்குடி அட்வகேட் …

>>

“மிஸ்டர் ராமச்சந்திரன்!”

பலர் முன்னிலையில் அதட்டலாக எம்.ஜி.ஆரை அழைக்கிறார் நடிகை பானுமதி ; திகைப்புடன் திரும்பிப் பார்க்கிறார் எம்.ஜி.ஆர். !இது நடந்தது “நாடோடி மன்னன்” படப்பிடிப்பு சமயத்தில்..!ஆம்..!ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ,ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள் !ஆனால் ஒரு புகழ்மிக்க மனிதனின் வெற்றிக்கு …

>>

ஹரன் பிரசன்னா/அசோகமித்திரன் வந்திருந்தார்

சாரு நிவேதிதா தன் வலைப்பதிவில் எழுதியதை நேற்றிரவு பொழுது போகாத நேரத்தில் படித்தேன். அதைத் தொடர்ந்து, இதுவரை எழுதாத ஒன்றைப் பதிவு செய்யலாம் என்று இதை எழுதுகிறேன். எனி இந்தியன் பதிப்பகம் சார்பாகக் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்திருந்த நேரம். …

>>

ஜெயதேவன்/பழைய நண்பரை இழந்தேன்

1975 . 80களில் வேலை தேடி சென்னையில் அலைந்து கொண்டிருந்த நேரம். எங்கள் குடும்ப நண்பர் சிந்தாதிரிப்பேட்டை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சினிமா வெளியிட்டாளர் திரு தங்கப்பாண்டியன் அவர்கள் மூலமாக சாதாரண ஆசிரியராக எனக்கு அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகர் ராஜேஷ். …

>>

ஷான் கருப்பசாமி/மிகவும் அழகிய ஒரு புகைப்படம்

மிகவும் அழகிய ஒரு புகைப்படம். சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன். ராகுல் டிராவிட் தான் ஆடிய காலகட்டத்தில் ஒரு சிறந்த வீரர் ஆனால் டி20 கிரிக்கெட்டின் எழுச்சியும் அதன் பின்னிருந்த வியாபாரமும் அவரைப் போல நின்று நிதானமாக அதே நேரம் அலட்டிக் …

>>

ஜெயகாந்தன் கலைஞர் கருணாநிதி அமர்ந்திருந்த மேடையில்…

ஜெயகாந்தன் கலைஞர் கருணாநிதி அமர்ந்திருந்த மேடையில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய தொடங்கிய ஜெயகாந்தன் யாரை வணங்குவது என்று தெரியவில்லை. இந்த மேடையில் நான் வணங்கத்தக்க மனிதர்கள் யாரும் இல்லை என்றார். ஆனால் ஒரு பொதுமேடையில் …

>>

 இரா.தெ.முத்து / நாறும்பூ பற்றி ..

நாறும்பூநாதன் என்கிற வாசனை கமழும் பூ என்பதான இந்தப் பெயர்தான் முதலில் என்னை ஈர்த்தது. நாறும்பூவின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கனவில் உதிர்ந்த பூ’ வெளியான நேரம் எனக்கொரு நூலை வாசிக்கக் கொடுத்தார்.பின் இந்தத் தொகுப்பை விற்றுத் தருவதாகச் சொல்லி, ஒரு …

>>

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில்….

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து திரும்பிய பிறகு பூமியில் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்க்கை மாற்றங்கள்இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 2024 ஜூன் 5 முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 286 நாட்களுக்கு மேல் தங்கியுள்ளார். மொத்தம் 600 நாட்களுக்கு …

>>

சுஜாதா/வத்தகுழம்பு மாஹாத்மியம்

வத்தகுழம்பு, இது இருந்து விட்டால் ஒரு ஆழாக்கு சாதம் கூட அசால்டாக இறங்கும். வத்த வத்த வைப்பதால் வத்தகுழம்பா இல்லை வத்தல் போட்டு வைப்பதால் வத்தகுழம்பா?வத்தகுழம்பிற்கு ஏற்றது மணதக்காளி வத்தலோ சுண்டைக்காய் வத்தலோ தான். சின்ன வெங்காயம் கூட பரவாயில்லை.பூண்டு உண்பவர்கள் …

>>

சாரு நிவேதிதா/”புருஷன் – அராத்து”

இப்படி ஒரு நாவலை நான் உலக இலக்கியத்திலேயே வாசித்ததில்லை. இந்திய இலக்கியத்திலும்தான். காரணம், இதுவரை இப்படிப்பட்ட வாழ்க்கையை எந்த எழுத்தாளனுக்கும் காணக் கிடைத்திருக்காது. தஸ்தயேவ்ஸ்கி இப்படி ஒரு வாழ்வைக் கண்டிருக்க மாட்டார். இது பின்நவீனத்துவக் காலகட்டத்துக்கே உரியது. ஆனாலும் இந்தக் காலகட்டத்தில் …

>>

எஸ்.ராமகிருஷ்ணன்

என் மனைவி, சந்திரபிரபா. என்னையும் எழுத்தையும் நேசிக்கிறவள். கட்டடக்கலை பயின்றவள். ஐந்து ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவள், என் தங்கையோடு படித்தவள். அவளுடைய அண்ணன் என்னுடைய கல்லூரித் தோழன். சொந்த ஊர் ராஜபாளையம் அருகில் உள்ள சம்சிகாபுரம். அவளுடைய …

>>

தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னி!

தமிழ் சினிமா பல கனவுக் கன்னிகளைத் தந்திருக்கிறது. அவர்களின் அழகில் பலர் தூக்கம் தொலைத்திருக்கிறார்கள். அந்தக் கனவுக் கன்னிகளுக்கு எல்லாம் முன்னோடி டி.ஆர்.ராஜகுமாரி. தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னி அவர்தான்.அதற்காக அவர் அப்படியே பளபளக்கும் சிவந்த மேனி கொண்டவர் என்ற …

>>

குகேஷ்

“அவங்க இல்லன்னா நான் இங்க இல்ல” யாரைச் சொல்கிறார் சாம்பியன் குகேஷ்?“அப்பா, அம்மா இருவரும் மருத்துவர்களாக இருந்தாலும் என்னுடன் பயணிப்பதற்காக அப்பா தனது மருத்துவப் பணியை விட்டார். அப்பொழுதெல்லாம் ஸ்பான்சர் இல்லாததால், நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். எங்க அம்மா ஒருவருடைய சம்பாத்தியம் …

>>

அபிலாஷ் சந்திரன்/சாருவின் ஔரங்சேப் நாவல்

சாருவின் ஔரங்சேப் நாவலை தமிழில் அது தொடராக வெளிவந்தபோது படித்து சிறுகுறிப்புகளை எழுதினேன். தொடரென்பதால் அது தேவைக்கதிகமாக நீண்டுவிட்டது என அதை நாவலாக அச்சில் படிக்கையில் தோன்றியது. எப்படிப் பார்த்தாலும் தமிழில் மிகத்தனித்துவமான சுவையான நாவல் அது. மேலும் ஆங்கில மொழியாக்கத்துக்காக …

>>

எழுத்தாளர் சுஜாதா/இப்படியும் ஒரு மாறுதலான பிறந்த நாள் குறிப்புக்கள்! –

சுஜாதா தனது 70ஆவது பிறந்த தினத்தைப் (2005) பற்றிக் கூறியது.“மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன்.மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள்.ஒரு தாத்தா …

>>

எழுத்துக்கு மரியாதை – லேடீஸ் ஸ்பெஷல் ஸ்டைல்!/ஜெ.பாஸ்கரன்

“லேடீஸ் ஸ்பெஷல்” 2024 ஆம் வருட தீபாவளி மலர் வெளியிடப்பட்டதே வித்தியாசமாக இருந்தது. குவிகம் zoom மீட்டிங்கில் சிறப்பாக வெளியிடப்பட்டது! மலரில் எழுதிய சிலரும் பங்கு கொண்டு, மலரைப் பற்றிய தங்கள் அபிப்பிராயங்களைப் பகிர்ந்து கொண்ட நல்ல அறிமுகக் கூட்டமாக அமைந்தது. …

>>

கிப்ஸ் பறவைகள்/எம்.டி.முத்துக்குமாரசாமி

ஒரு அமெச்சூர் பறவையியலாளனான (ornithologist) எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஆங்கில இந்து செய்தித்தாளில் முதல்பக்கத்தில் Great Indian Bustards (GIBs) பறவைகள் பாகிஸ்தானுக்குப் போய்விட்டனவா என்ற தலைப்புடன் வந்திருந்த செய்தி கவர்ந்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த சையது ரிஸ்வான் …

>>

தாய் எனும் சக்தி/ சூர்யா பாலகுமாரன்

‘என்றென்றும் அன்புடன்’ என்றொரு புத்தகத்தின் துவக்கத்தை என்னால் எப்பவுமே மறக்க முடியாது. முழு புத்தகமும் கிறங்கடிக்க வைக்கும் என்றாலும் அந்த ஓப்பனிங் சீன், முதல் சில பக்கங்களில் வரும் காட்சியமைப்பு மிகவும் அழகாக இருக்கும். எழுத்தாளர் பாலகுமாரனைத் தெரிந்தவர்களுக்கு ‘என்றென்றும் அன்புடன்’ …

>>

க்ருஷாங்கினி/எழுத்தாளர் பூரணி பிறந்தநாள் இன்று

தொகுப்பு: ஆர்.வைதேகி இதுதானே பூரணம்? நவம்பர் 16 அன்று, 100 வயதில் இயற்கை எய்தினார் எழுத்தாளர் பூரணி. அவரது நினைவுகளைப் பகிர்கிறார், அவரது மகள் கவிஞர் க்ருஷாங்கினி…‘‘எனக்கு அப்போது 9 வயது. திடீரென சொத்து எல்லாம் இழந்து, அடுத்த வேளை சாப்பாடே …

>>

வி.வி.கலைச்செல்வி/ஈயம் பித்தளைக்கும் இல்லாத ஒன்று

பழைய பொருட்கள் வாங்குபவர்இரண்டு நாட்களாய்மூன்று முறைக்குமேல்இந்தப்பக்கமாகவந்துவிட்டு போகிறார்பாப்பூவின் அப்பா கொஞ்சம்பழைய பொருட்களைஎடுத்து பட்டியலிடுகிறார்எழுதி எழுதி பக்கம்தீர்ந்து போன நோட்டுகளைபாப்பூ பக்குவமாய்பையிலிட்டு வைத்துள்ளாள்அம்மாவும் அவளுக்குவேண்டாததை ஓரமாய்அடுக்கியிருக்கிறாள்மீதமிருப்பதுஎன் முறை தான்எல்லாப் பழையதிலிருந்தும்ஏதாவது புதியதைகண்டுகொள்கிற என்னிடம்எடுத்து வைப்பதற்கும்போடுவதற்கும் எதுவுமில்லைஎன்பது கசக்கிற உண்மை தாராபுரம்

>>

தென்கொரிய நாவலாசிரியரான ஹான் காங்கின் முக்கிய நாவல் The Vegetarian/கால சுப்பிரமணியன்

இன்று நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட தென்கொரிய நாவலாசிரியரான ஹான் காங்கின் முக்கிய நாவல் The Vegetarian (Han Kang), தமிழில் நண்பர் சமயவேலால் மொழிபெயர்க்கப்பட்டு, நண்பர் கலாபனால் தமிழ்வெளி பதிப்பகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உடனே உங்கள் பிரதிக்கு முந்துங்கள். தாமதித்தால் மறுபதிப்புக்காகக் காத்திருக்க …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/கொடிகாத்த குமரனும் ராமாயி அம்மாளும்!

திருப்பூர் குமரன் பிறந்த தினம்: ஜனவரி 4 *மகாத்மாவின் சிந்தனைகளால் கவரப்பட்டு, காந்திமயமாக வாழ்ந்து இளம்வயதில் மறைந்த திருப்பூர் குமரன் வாழ்வில் ஓர் ஆச்சரியம்.தேதியும் ஆண்டும் வேறு வேறானாலும் அவர் காந்தி பிறந்த அக்டோபர் மாதம் பிறந்தார். (அக்டோபர் 4, 1904.) …

>>

மோகன் ஜி/உலக முதியோர் தின வாழ்த்துகள்

மூப்பின் ராப் கிழவி:தடியெதுக்கு? ஏய் கிழவா !துள்ளிக் குதித்தாடு!தாடையிலே கையெதுக்கு?தாவி விளையாடு! நாட்படவே மரம் வளரும்.காலமேறக் கல் இறுகும்.வயதானால் மனிதன் மட்டும்,மூப்பென்று முடங்குவதேன் கிழவா?முனைந்திடா தடங்குவதேன் கிழவா? கிழவன்: ஆடியாச்சு ஆட்டமெல்லாம்.ஆயிரமாய்ப் பார்த்தாச்சு!ஆடுவதெலாம் அடங்குமடி கிழவி!ஆடுசதை ஓய்ந்துபோச்சு கிழவி! துள்ளவொரு காலமடி! …

>>

கலாரசிகன் தினமணியில்..

அவரை நான் சந்தித்ததில்லை. ஆனால், அவருடைய எழுத்துகளைப் படித்திருக்கிறேன். நான் அவரிடம் பேசியதில்லை. ஆனால், அவரது இலக்கியப் பங்களிப்புகள் பற்றி என்னுடைய நண்பர்களிடம் பலமுறை சிலாகித்துப் பேசியிருக்கிறேன். தமிழில் வெளிவரும் இலக்கியச் சிற்றேடுகளில் தரமானதும், தனித்துவம் வாய்ந்ததுமான இதழ் அழகியசிங்கரின் “நவீன …

>>

வண்ணதாசன்/மகப் பேறு மருத்துவ மனை

அனேகமா எங்க வீட்டுத் தபால் பெட்டி ‘ மகப் பேறு மருத்துவ மனை ‘ ஆகவே ஆகிவிட்டது.நாங்கள் கண் காண, இது ஆறு அல்லது ஏழாவது குஞ்சு பொரிப்பாக இருக்கும். இரண்டு மாசம் மூணு மாசம் நாங்கள் சேர்ந்தாற்போல வெளியூரில் இருந்த …

>>

வி.வி.கலைச்செல்வி/ஒரு பரிசு ஒரு கவலை

என் பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்து எழுதிக் கொண்டு வா என்றாள் என் தோழிசத்தியமாக எதை எழுதுவது.?எதைவிடுவது.? என்று தெரியவில்லை. எதையாவது எழுதிவிட்டால் எதற்கு உனக்கு இந்த வேலையென்று .?கோபித்து கொள்வாள்எதையாவது விட்டுவிட்டால் உனக்குத் தெரிந்ததுஇவ்வளவுதானா.? என்பாள் ஏன் வம்பென்று வெறுங்கையை …

>>

மோகன் ஜி/இல்லாமை

பூக்காத செடிக்குஇலையே தான் பூவடியோ!பிள்ளையிலா பெண்ணுக்குபுருஷனே தான் பிள்ளையடி! ஆலையில்லா ஊருக்குசர்க்கரை இலுப்பையடி!ஆளில்லாக் கோயிலுக்கோவௌவாலே பக்தனடி! வேகமில்லா வண்டிக்குசாலையிறக்கம் வேகமடி!வேலையில்லா வீணனுக்குஊர்வம்பே வேலையடி! ரசிச்சவன் கண்ணுக்குராட்சசியும் ரம்பையடி !பசிச்சவனுக்கே பழையசோறும்பந்தி வைச்ச விருந்தடியோ! கெட்டுப்போன உறவுக்கேதிருவிழா ஒரு குசலமடி!விட்டுப்போன மனசுக்குஊர்சேவை மருந்தடியோ! …

>>

திருப்பதி லட்டு/ஜெயதீபன்

திருப்பதி லட்டு தொடர்பாக நம் மனம் போன போக்கில் விமர்சனம் செய்யக்கூடாது .ஒரு வேளை ஜெகன் மோகன் ஆட்சியில் இது நடைபெற்றிருந்தாலும் ஆட்சிக்கும் இதற்கும் தொடர்பு இல்லை . லட்டு தயாரிப்பு முழுவதும் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது இந்த லட்டு தயாரிக்கப்படுவதற்கு …

>>

இதைப் போலத்தான் அதுவும்/வி.வி. கலைச்செல்வி

நேற்று எப்படியோ அப்படித்தான்இன்றும் இருந்ததுஎன்று என்னால் உறுதியாக கூறமுடியவில்லை. உறுதியாக கூறினால் அது உண்மையானதாகவும் இன்னும் உறுதியானதாகவும் இருக்க வேண்டும். எல்லா உறுதிக்கும் இங்கே இப்போது சாட்சிகள் கேட்கிறார்கள். அது எப்போதும் என்னால் முடியாமல் போய்விடுகிறது. நேற்று ஒரு கவிதையை ரசித்தேன்இன்று …

>>

செ.புனிதஜோதி கவிதை

பூ விழுதலைஇயல்பாய்ஏற்றுக்கொள்ளும்நிலமாய் இருந்திருக்கிறாள் காலம் முழுதும்அவள் மீதுவெயில்படர்ந்தும்ஒருமுறை கூடசலித்துகொள்ளவில்லைஇவ் வாழ்வை பனைமரத்தில்இருவாசல் வைத்துகட்டும்தூக்கணாங் குருவியின்கூடு போன்றதுவாழ்வு என்கிறாள் வாழ்வைஇனிதாய்காண்பவளிடத்தில்இதுபோன்றசொற்களைத்தவிரவேறு என்னஎதிர்ப்பார்க்க? இருள் நெருங்கமுடியாஒளியவள்..

>>

நகரம் (சிறுகதை ) — சுஜாதா

முகநூலில் பதிவு செய்தவர் : ராம் ஸ்ரீதர் ”பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரம் மதுரை. பண்டைய தேசப் படங்களில் ‘மட்ரா’ என்று காணப்படுவதும், ஆங்கிலத்தில் ‘மதுரா’ என்று சொல்லப்படுவதும், கிரேக்கர்களால் ‘மெதோரா’ என்று குறிப்பிடுவதும் இத்தமிழ் மதுரையே யாம்!”-கால்டுவெல் ஒப்பிலக்கணம் சுவர்களில் ஓரடி …

>>

ஆர்வா/பத்மினியின் ஒரு ‘Mid shot’ஆல்’கதி கலங்கிய மும்பை பட உலகம்

1970’களில் பத்மினி அவர்கள் நம் தமிழ் சினிமாவில் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு இருந்தார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் அன்றைய காலகட்டத்தில் அவர் ஹிந்தியில் ‘மேரா நாம் ஜோக்கர்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.. அந்தத் திரைப்படத்தில் ஒரு காட்சியில், …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/தயிர் வடை

ஆசிரியர் கலைமகள்…………… வட இந்தியாவில் இருந்து ஒரு நண்பர் வந்திருந்தார். தாஹி வாடா சாப்பிடலாமா? என்று கேட்டார். எனக்குத் தயிர் வடை என்றால் ரொம்பப் பிடிக்கும்! எனவே உடனே சரி என்று சொல்லி விட்டேன். சென்னையில் வெயில் இல்லை என்றாலும் கூட …

>>

முகநூலில் ஜெயதேவன் எழுதியது

தமிழ் திரைப்பட துறைக்கு என்று ஒரு சாபம் இருக்கிறது என்பது தெரியுமா? சில நல்ல படங்கள் வந்து இனி சினிமாத்துறை உண்மையில் கலைத்துறையாக மாறிவிடும் என்று நாம் கற்பனையில் மிதந்து‌ கொண்டிருக்கும் போதுஇந்த ஆட்டத்தை கலைப்பதற்காகவே பிறப்பெடுத்த நெல்சன்களும் லோகேஷ் கனகராஜ்களும் …

>>

மாலனின்பக்கத்தி லிருந்து ……

…. என்னுடைய ஐம்பதாண்டு கால நண்பன் ராஜாமணி. அலிடாலியா என்று அவர் வேலை பார்த்த நிறுவனத்தோடு சேர்த்து அறியப்படுபவர். நான் 70களின் தொடக்கத்தில் கல்வி முடித்து பணிக்காகச் சென்னை வந்ததும் அறிமுகமான முதல் இலக்கிய நண்பர் அவர் மூலம் அறிமுகமானவர்கள்தான் ராஜூ, …

>>

வசந்த பாலன் முகநூலில் பதிவு செய்தது

கேரளா வாழ்நிலையோடு தனித்தீவாக தவிக்கும் மனிதர்களையும் இடுகாடு கிடைக்காமல் தவிக்கும் ஒரு சடலத்தையும் வைத்துக்கொண்டு கண்ணிமைக்க முடியாத துயர் படம் நெடுக ஒரு பெருமழையை போல பெய்தவண்ணமிருக்கிறது.படம்

>>

சண்டே ஸ்பெஷல் டாபிக்/ரங்கராஜன் இ.வி

#முதுமை சென்ற பிப்ரவரி மாதம் எனக்கு 86 நிறைந்து 87 தொடங்கியது. சுமார் 30 வருடங்களுக்கு முன் நான் இத்தனை ஆண்டு காலம் ஜிவித்திருப்பேன் என்று யாராவது சொல்லி இருந்தால் நம்பியே இருக்க மாட்டேன். 30 வயது முதல் 64 வயது …

>>

ஹீமோபோலியோ பற்றி அச்சமடைய வேண்டாம்/Vasu Devan 

பெரிய அளவில் நோய்கள் வந்த்ததில்லை. இளம் வய்தில் விளையாட்டு வீரன். சிறுவயதில் ஹீமோபோலியோ குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டது. இது நோய் அல்ல. ப்ரொட்டீன் குறைபாடு. லட்சத்தில் ஒரு ஆணுக்கு குறைபாடு இருக்கும். இதனால் ஆண்கள் பாதிக்கப்படவர்கள். பெண்கள் Carriers. 19ம் நூற்றாண்டு விக்டோரியா …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/அல்வாவும் மத்திய பட்ஜெட்டும்……

ஆசிரியர் கலைமகள்…………….. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக அல்வா கிண்டுவது வழக்கமாக இருந்து வருகிறது இது ஏன்? என்று என்னிடம் தேஜஸ் ஃபவுண்டேஷன் அறங்காவலரும், பேராசிரியருமான திரு கே ஜி ரகுநாதன் அவர்கள் ஒரு கேள்வியைக் கேட்டார்…… இப்பொழுது …

>>

மயூரப் பிரியன்/மோகன் ஜி

இந்தப் படத்திலுள்ள முருகனின் பெயர் ‘மயூரப் பிரியா’. பல தசாப்தங்களுக்கு முன் வரையப் பட்டது. பழைய பஜனை மடங்களிலும், கோயில் வளாகங்களிலும் காணலாம். பச்சையும் மஞ்சளுமாய் இரண்டே வண்ணங்கள் தோய்ந்த சித்திரம். இளவயதில் இருந்தே இந்த முருகன் என்னைக் கவர்ந்து, சிந்தையைப் …

>>

மனைவிக்கு திடீர் சந்தேகம் வந்தது/முக நூலிலிருந்து எடுத்தது

கணவரின் காதில் விழவில்லை எனில்….
சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்துப் பேசுங்கள்
பின் பத்து, ஐந்து இப்படி குறைத்துக்

>>

சுகா/தனது இறுதி யாத்திரைக்கு ஜே.கே கிளம்பியபோது…..

பெசன்ட் நகர் மின்மயானக்கட்டிடத்தின் வாசலிலேயே முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செந்தில்நாதன் உட்பட அதன் நிர்வாகிகள் நின்று கொண்டிருந்தனர். ஜே.கேயின் நெருங்கிய நண்பரான தேவபாரதியை இரண்டு பேராகச் சேர்ந்து

>>

கே.என். செந்தில் பதிவு

விடுகிறார்கள். தங்குமிடம் உணவுக்கும் ஏற்பாடு உள்ளது. கொரங்கினி தீ விபத்தில் பெரும் உயிரிழப்பு ஏற்பட்ட பின் அனுமதி பெறுவதில் சிக்கல் உள்ளதால்

>>

கும்பகோணமு……/மோகன் ஜி

பல வருடங்களுக்குமுன் ஹைதராபாதில் பணிபுரிந்த போது, ஏதோ ஒரு கூட்டத்தில் பேச அழைக்கப் பட்டிருந்தேன். எனக்குமுன் ஒருவர் தெலுங்கில் உரையாற்றியபோது ‘கும்பகோணமு’ இரண்டுமூன்று முறை சந்தி சிரித்தது. ‘புளக்… புளக்’ சத்தம் கேட்டதா? அமர்ந்தபடி பொங்க ஆரம்பித்திருந்தேன். எ

>>

தோனி – எ ரேர் பாஸிடிவ் வைப்/அராத்து

ஒரு சிறபம் செதுக்குவது போல , ஒரு ஓவியம் வரைவது போல , ஒரு கவிதை எழுதுவது போல கிரிக்கெட்டை அணுக முடியாது. அப்படி பரதநாட்டியம் போல நயமாக கிரிக்கெட் ஆடுவேன் என்று ஒருவர் சொன்னால் நெட் பிராக்டீஸில் வேண்

>>

Today JK’s Birth Day!/வாசு தேவன் 

கஸ்தூரிபாய் இருக்கும்போது காந்திக்கு காதல் மலர்ந்தது.. ரவீந்திரநாத் தாகூரின் அக்கா மகள் சரளா தேவி மேல் பித்தம் கொண்டு காதல் போதையில் கடிதம் எழுதியவர்…ஒரு மனிதனின் பலகீன தருணங்களை

>>

பா.ராகவன் முகநூலில் எழுதியது

ஓர் உதாரணம், என்னால் இயர்போன் அணிந்து நடக்க முடியாது. என்னதான் திருகு திருகென்று திருகி உள்ளே சொருகினாலும் அந்தக் காதுக் குமிழ்

>>

கட்டாயமாக வலிமிகாத இடங்கள்/கவிஞர் மகுடேசுவரன்

இரண்டு சொற்களுக்கிடையே வல்லின ஒற்றெழுத்து இடுவதில் இன்னொரு வகையும் இருக்கிறது. இரண்டாம் சொல் வல்லினத்தில் தொடங்கினாலு

>>

இவருக்கு ஒரு இனோவா கார், சன் பிக்சர்ஸ் பரிசளிக்குமா?/திருவட்டாறு சிந்துகுமார்

ஜெயிலரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரொம்ப ரிஸ்க் எடுத்து நடிக்கவில்லை. ஸ்டைலிஷாக பல காட்சிகளில் நடந்து வந்தார். காய்கறி வாங்கினார். கால்

>>

பூமியும்-வானமும்/நியாண்டர் செல்வன்

தன்னை முந்திக்கொன்டு அமெரிக்கா நிலவுக்கு மனிதனை அனுப்பியதால் ஜாம்பியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனர் அதிர்ச்சி, நிறுவனம்

>>

காக்கைச் சிறகினிலே!!/?லதா ஸ்ரீனி

ஆசையாய் இரண்டு பிஸ்கட் கையில் வைத்து வேடிக்கைப் பார்த்து சாப்பிடுகையில் எங்கிருந்தோ வந்து என் கையில் இருந்ததை பிடுங்கி சென்றது.பிடுங்கிய வேகத்தில் கையில்

>>

மேதகு ஆளுநர் மாளிகையில் கலைமகள் விழா/ஜெ.பாஸ்கரன்

தமிழ்நாடு மேதகு ஆளுநர் திரு R.N.Ravi அவர்கள். ஆளுநர் மாளிகையின் எழில்மிகு ‘தர்பார்’ அரங்கில், அமைதியாகவும், நேரப்படியும்,

>>

அரிசாகா (Arisaka) எனும் பிலிப்பைன்ஸ் படம் ஒன்று பார்த்தேன்/நியாண்டர் செல்வன்

அவர் காரில் போகையில் வேடிக்கையாக தன்னுடன் வந்த பெண் போலிஸ் அதிகாரி மரியானோ என்பவருக்கு ஒரு தகவலை சொல்கிறார்..”ஜப்பானியர்கள் என்னை

>>

மறக்க முடியாத சில நிகழ்வுகள்/ இந்துமதி

லையத்தில் அமர்ந்திருந்தபோது, என் முன்வரிசையில் அமர்வதற்காக மூப்பனார் வந்தார். உட்காரப் போனவர் என்னைப் பார்த்துவிட்டு, திரும்பி என்னை நோக்கி வந்து, ‘அம்மா வணக்கம். என்னை மூப்பனார்னு சொல்லுவாங்க’ என்றார். ‘அய்யோ

>>

கிருஷ்ணா டாவின்சி /முத்துலிங்கம்

இருக்கும். வாசகர்கள் எதிர்பாராத ஒரு பதிலைக் கொடுப்பதில்தான் சாமர்த்தியம் இருந்தது. ஒரு முறை வாசகர் இப்படி கேள்வி கேட்டார். ’உங்களுக்கு

>>

தற்போதைய சீனாவின் துயரத்தைப் பார்க்கவேண்டும்/வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன்

சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது முதலே ஒருவித அச்சம் எனக்கு ஏற்பட்டது. அவர்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளையே, அந்நாடு, தம் மக்களுக்குச் செலுத்தியது. அவற்றின் செயல் திறன் பற்றிய

>>

உங்களுடைய அன்றாட வாழ்க்கை குறித்து…/அசோகமித்திரன்

மூணுநாலு வருஷத்திற்கு முன்பு இறந்து விடுவேன் என நினைத்தேன். நினைவே இல்லாமல் இருந்தேன். எல்லோரும் அழுதார்கள். எனக்கு ஒரு நாளில் வாழ்வதே கஷ்டமாக இருக்கிறது. எனக்கு கிடைத்த விருதுக்கான நிகழ்ச்சி சென்னை மியூசியம் தியெட்டரில் நடப்பதாகச் சொன்னார்கள். “உங்களால் அந்த இடத்தை …

>>

தமிழ்நாடகத் தலைமையாசிரியர்/பிரளயன்

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நூற்றாண்டு இது. [1922-2022]
தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் என்றதும் ஏதோ மடாதிபதியின் பெயர் போலிருக்கிறதே என இன்றைய தலைமுறையினர் சிலர் நினைக்கக்கூடும்.
அவர் மடாதிபதியல்ல; மடாதிபதிகளைவிட , மக்க

>>

குஷ்வந்த் சிங் எழுதிய Women and Men in my Life/செந்தூரம் ஜெகதீஷ்

குஷ்வந்த் சிங் எழுதிய Women and Men in my Life புத்தகம் படித்தேன். இதில் தேவயானி சவுபா என்ற பெண் பத்திரிகையாளரைப் பற்றி எழுதி இருக்கிறார். தேவயானி அந்தக் காலத்தில் ஸ்டார் அண்ட் ஸ்டைல்

>>

எழுத்தாளர் சிவசங்கரி/வி.ராம்ஜி

அது எப்படியும் 20 வருடங்களுக்கு மேல் இருக்கும். சிவசங்கரியின் வீடு தேடி, கண்டுபிடித்து, அவர் வீட்டு வாசலை அடைந்ததும் உள்ளே சென்று அவரிடம் பேசியதும் நன்றாக நினைவிருக்கிறது. கிளம்பும்போது,

>>

ஒரு நாளில் தஞ்சையை சுற்றி எட்டு கோவில்கள்/மாதவ பூவராக மூர்த்தி

அப்பாவின் திவசம் நவம்பர் 17 வியாழக்கிழமை . தம்பி திருச்சியில் இருப்பதால் சீரங்கத்தில் நடத்துவதாக முடிவு செய்தோம்.16 நவம்பர்

>>

முள்ளிவாய்க்கால் துயர சம்பவம்../கே.என்.சிவராமன்

முள்ளிவாய்க்கால் துயர சம்பவத்துக்கும் தமிழகத்தில் சரித்திர நாவல்கள் அதிகரித்திருப்பதற்கும் தொடர்பு இருக்கிறதா..?

>>

டிசம்பர் 4. ந.பிச்சமூர்த்தியின் (15.8.1900- 4.12.1976) நினைவு நாள்/சுப்பிரமணி இரமேஷ்

வால்ட் விட்மன் மற்றும் பாரதியாரின் படைப்புகளால் ஊக்கம் பெற்ற ந.பிச்சமூர்த்தி, தானும் அதுபோன்ற சோதனை முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று எண்ணினார். விளைவு, யாப்பைத் துறந்த புதுக்கவிதை எனும் வடிவம் தமிழுக்குக் கிடைத்தது. இப்புதிய வடிவத்தை

>>

தமிழ்த்திரைப்பட இசையமைப்பாளர்கள்/ஜி ராமநாதன்/டி வி ராதாகிருஷ்ணன்

ஜி. ராமநாதன் இசைமேதை என்றும், சங்கீதச் சக்கரவர்த்தி என்றும் சொல்வர். சுருக்கமாக ஜிஆர் எனவும் வழங்கப்பட்டார். தமிழ்த் திரைப்பட உலகின் நட்சத்திர அந்தஸ்த்து பெற்ற எம். கே. தியாகராஜ பாகவதரின் திரைப்படங்கள், சேலத்தைச் சேர்ந்த மாடர்ன் தியேட்டர்ஸ் மற்றும் கோயம்புத்தூரின்

>>

10 தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடு…/ஸ்ருதி இலக்கியம் 

ளர்களுக்கு வீடு வழங்க அரசாணை வெளியீடு.
முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ கருணாநிதியின்‌ 97-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ கடந்த 3.6.2021

>>

ஆக்ராவில் என்னைக் கவர்ந்த ஒரு காஃபி ஷாப்../பாதசாரி விஸ்வநாதன் 

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு உயிர்வாழும் பெண்களுக்காக , பெண்கள் நடத்தும் அதிநவீன அழகிய ஹோட்டல்.(Run by Acid Attack Fighters.) பெயர் :SHEROES உலகிலேயே இது போன்ற முயற்சி இங்கு தான் துவக்கமாம்..

>>

உங்கள் தேடல் என்பது எதை நோக்கியது/எம்.டி.முத்துக்குமாரசாமி

சமீபத்தில் நண்பரொருவர் உங்கள் தேடல் என்பது எதை நோக்கியது அதன் அறுதியான விழுமியம் என்ன என்று கேட்டார். இந்தக் கேள்விகள் ஒவ்வொரு

>>

பா.செயப்பிரகாசம் கடைசிப் பேட்டி…..

ஒரு குறிப்பிட்ட காலம்வரை அனைத்து உறுப்புக்களும் இசைவாய் இயங்கிட, உடல் ஒரு கூட்டிசையைப் பிரவகிக்கிறது. முதுமைவரை உறுப்புகளுக்கு நம்

>>

இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற அனி எர்னோ/யமுனா ராஜேந்திரன் 

இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற அனி எர்னோவின் இருநாவல்களையும் அதையொட்டிய இரு திரைப்படங்களையும் பகலும் இரவும் என வாசித்து- பார்த்து முடித்தேன்.

>>

ஒரு சிறுமியின் கதை/அன்னி எர்னாக்ஸ்

சேகரித்த அனைத்து விளக்கங்களையும் ஒப்புக்கொள்வதாகும் இந்த கதை. இப்போது ஆங்கிலத்தில், அலிசன் எல். ஸ்ட்ரேயர் மொழிபெயர்த்துள்ளார். இந்த புத்தகம் எர்னாக்ஸ் டீன் ஏஜ் பருவத்தில்

>>

திரு ‘சோ’ அவர்களின் நினைவாக…./ஜெ.பாஸ்கரன்

அவருக்குப் பிறந்தநாள் இன்று… அதைக் கொண்டாடமாட்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனாலென்ன, நாம் அவரது எழுத்துக்களின்

>>

ஏன் ராஜினாமா செய்தார் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி/பரதன் வெங்கட் – அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு

உயிருக்குயிராய்த் தாம் பத்து வருஷம் உழைத்து வளர்த்த ஆனந்தவிகடனில் இருந்து கல்கி அவர்கள் ஏன் ராஜினாமா செய்தார் என்பது யாருக்குமே புரியாத புதிராக இருந்தது. அவரும் அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.
திரு.சுந்தா எழுதிய ‘பொன்னியின் புதல்வர்’என்ற நூலில், தினமணிக்கதிர்

>>

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்/ஆர்.அபிலாஷ்

) கடந்த 50 ஓவர், 20 ஓவர் உலகக் கோப்பைகளின் போது நாம் அணித்தேர்வு, திட்டமிடல், வீரர்களின் மேலாண்மை ஆகியவற்றில் பார்த்த குளறுபடிகளுக்கு ரவி சாஸ்திரியின் தலையாட்டி

>>

ஜெயமோகனுக்கு எது உச்சமோ../சாருநிவேதிதா

ஜெயமோகனுக்கு எது உச்சமோ அது எனக்கு ஆகாது. அவருக்கும் அப்படியே. எனக்கு மரியோ பர்கஸ் யோசா ஒரு உச்சம் என்றால் ஜெயமோகனுக்கு யோசா எழுத்தாளனே இல்லை. தமிழிலிருந்தே உதாரணம் தரலாம். சில தினங்களுக்கு முன்னால் ஆதவன் பற்றி ஜெயமோகன் இப்படி எழுதியிருந்தார்: …

>>

இளம் வெர்தரின் துயரங்கள்/ஆர்.அபிலாஷ்

இளம் வெர்தரின் துயரங்கள்” எனும் குறுநாவல் உலக இலக்கியத்தின் தலைமகன்களில் ஒருவரான ஜெர்மானிய மேதை கோதேயின் (சரியான உச்சரிப்பு “கோற்ற” – கமகம் என்பதில் உள்ள

>>

ஆதவன் சுந்தரத்தின் மனைவி ஹேமா சுந்தரம் /- ஆர். வெங்கடேஷ்

“1976ல் கல்யாணம் ஆச்சு. பேப்பர்ல விளம்பரம் குடுத்து, அதுல பார்த்து தேர்ந்தெடுத்து வந்து பொண்ணு பார்த்தார். இந்த பெங்களூர் வீட்டுலதான் பொண்ணு பார்ததார். வீட்டுக்கு வந்தபோது, இங்க இருக்கற இங்கிலீஷ் புக்ஸ், பேப்பர்களெல்லாம் பார்த்திருப்பார் போலயிருக்கு. என்கிட்ட ஒண்ணே ஒண்ணுதான் கேட்டார். “உனக்குத் தமிழ் தெரியுமா?”ன்னு கேட்டார். தெரியும்னு சொன்னேன்.

>>

ஒரு நிமிஷம்/மாலன்

எழுத்தாளர் கு.அழகிரிசாமி உடல் நலம் குன்றிப் படுக்கையில் இருந்தார். பத்திரிகை ஆசிரியராக இருந்த அவரது நண்பர் அவரை நலம் விசாரிக்கப் போனார். பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பும் போது ” ஒரு நிமிஷம்” என்று அவரை நிறுத்தினார்

>>

தோழர் தொல்.திருமாவளவனின் மணிவிழா/சுகுணா திவாகர்

தனித்துவத்தை மறுத்து ஒற்றைத் தேசியத்தைத் தீவிரத்துடன் வலியுறுத்துபவர், பெண்களையும் பெண் எழுத்தாளர்களையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவுதூரம் இழிவுபடுத்துபவர். திருமாவளவன் தன் கருத்தியல் முன்னோடிகளாக முன்னிறுத்தும் அம்பேத்கர், பெரியார் குறித்து ஜெயமோகன் முன்வைத்த அவதூறுகளை பா.பிரபாகரன், நான் உள்பட

>>

தனக்கு வசிக்க வீடு வேண்டும்/குமரி அனந்தன்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், தனக்கு வசிக்க வீடு வேண்டும்’ என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்குக் கோரிக்கை வைத்திருந்தார். அந்தக் கோரிக்கையின் அடிப்படையில், இன்று அவருக்கு

>>

சிவு-வுடனும் தி. ஜா-வுடனும் ஒரு இனிய மாலை/வெங்கி

நெருங்கிக்கொண்டிருந்தது. முன்னிரவு எட்டு மணி. வெளியில் உடல் நடுக்கும் குளிர். பஸ்ஸின் ஜன்னல்களில் நீர்த் திவலைகள். நண்பர்களில் யாரோ சொல்லி, மியூசிக் ஸிஸ்டத்தில், “புது

>>

இன்று அந்த மஹா நடிகர் நாகேஷின் பிறந்த நாள்../S L நாணு

என்னுடைய “தவற விட்ட தருணங்களும் மீறி வந்த அன்பவங்களும்” புத்தகத்தில் திரு. நாகேஷ் அவர்களைப் பற்றி பதிவு செய்திருந்தேன்..

>>

தோப்பில் முகமது மீரான் / ஆபிதீன் பக்கங்கள்

ஒரு கடலோர கிராமத்தின் கதையிலிருந்து சாய்வு நாற்காலி வரைக்கும் நிறைய எழுதியாச்சு. இப்ப இந்த படைப்புகளிலேர்ந்து ஒரு படைப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கனும் என்று சொன்னால் நீங்கள் எதைத்

>>

சுஜாதாவின் மரணத்தின் போது/சாருநிவேதிதா

சுஜாதாவின் மரணத்தின் போது இறுதி அஞ்சலி செலுத்த அசோகமித்திரன் போன்ற ஓரிருவரைத் தவிர வேறு எழுத்தாளர்கள் யாரும்

>>

அசோக மித்திரன் பற்றி../சுஜாதா தேசிகன்

58 வருட காலமாக தமிழில் எழுதி வந்திருக்கிறார், அதில் 43 வருடங்கள் முழு நேர எழுத்தாளராகவே வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார். இவரை போலவே

>>

நரிக்குறவர்கள்/சோ தர்மன்

போராட்டத்தை தலைமையேற்று வழிநடத்தியவர் இந்தியக் கம்னியூஸ்ட் கட்சியின் கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர்.அழகர்சாமி எம்.எல்.ஏ.அவர்கள்.எங்கள் பின்னால் நின்றது இந்திய கம்னியூஸ்ட் கட்சி.அப்போதெல்லாம் இடதுசாரி இயக்கங்களில் அன்றாடக் காய்ச்சிகளான

>>

அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய நறுக் சுருக் கேள்வி பதில்கள்

கேள்வி: சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே… கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி

>>

1980-ஆம் ஆண்டு

“என்னைக் கவர்ந்த குத்துச் சண்டை வீரர் அலி மட்டும்தான்” என்று சொன்ன தமிழக முதல்வரும், குத்துச் சண்டைப் பிரியருமான எம்.ஜி.ஆர். அழைப்பின் பேரில் சென்னைக்கு வந்திருந்தார் குத்துச்சண்டை வீரர் முகமது அலி. சென்னை அமெச்சூர் பாக்சர்கள் சங்கத்துக்காக நிதி திரட்டும் வேடிக்கை …

>>

அவர் நினைவு நாள் செப்டம்பர் 12ஆம் தேதி

சுப்பிரமணிய பாரதியை பற்றி மேலும் பகிர்ந்து கொண்ட அவர், பாரதியை நெஞ்சிலும் நினைவிலும் சிந்தனையிலும் தேக்கி வைத்திருப்போர் பலர்

>>

பாரதியின் குரல்

தமிழ்நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரத தேச முழுவதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க. இன்னும் நாம் பாரத தேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேன்மேலும்

>>