
நேற்று எப்படியோ அப்படித்தான்
இன்றும் இருந்தது
என்று என்னால் உறுதியாக கூறமுடியவில்லை.
உறுதியாக கூறினால் அது உண்மையானதாகவும் இன்னும் உறுதியானதாகவும் இருக்க வேண்டும்.
எல்லா உறுதிக்கும் இங்கே இப்போது சாட்சிகள் கேட்கிறார்கள். அது எப்போதும் என்னால் முடியாமல் போய்விடுகிறது.
நேற்று ஒரு கவிதையை ரசித்தேன்
இன்று அந்தக் கவிதையை அழகாக நேருக்கு நேர் பார்த்தேன்
சாட்சிகள் இல்லாமல்.
தாராபுரம்
