ரவி அல்லது/ஞாபக மூட்டிடாத அழைப்புகள்

அள்ளித்தந்த வாசனையை
பூக்களென்று
சொன்னால்
என்ன செய்வது.
பருகத் தந்த
அன்பை
பானமெனச் சொன்னால்
என்ன செய்வது.
பறக்கக் கொடுத்த
வானத்தை
பார்த்துக் கொண்டிருந்தால்
என்ன செய்வது.
இவ்வாறான
புறக்கூத்தில்
நீங்கள்
அழைக்கும் பொழுது
என்னை
நான்
மறந்துபோனேனே
இப்பொழுது
என்ன செய்வது…

*